வியாழன், அக்டோபர் 22, 2015

சுருக்கமான இந்திய வரலாறு

அனைவரும் அறிந்த ஒன்றுதான் இந்திய வரலாறு என்றாலும் தெரிந்துகொண்டதை மீண்டும் நினைவு கூர்வோம்.
இந்திய வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகள் ஆண்டுகளுடன்
கி.மு 3000-1500-சிந்து சமவெளி நாகரீகம்.
கி.மு576-கெளதம புத்தர் பிறந்தார்.
கி.மு527-மகாவீரர் பிறந்தார்.
கி.மு327-326-அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான தரைவழிப்பாதை திறக்கப்பட்டது.
கி.மு313 சமண மரபுப்படி சந்திரகுப்தர் மெளரியர் அரியணை ஏறினார்.
கி.மு305 செலுக்கல்ஸ் சந்திரகுப்தர் மெளரியரிடம் தோல்வி அடைந்தார்.
கி.மு273-232 அசோகரின் ஆட்சி காலம்.
கி.மு261 கலிங்கத்துப் போரில் வெற்றி.
கி.மு145-101 இலங்கையில் சோழ அரசர் எல்லாராவின் ஆட்சி.
கி.மு58 விக்கிரம சகாப்தம் தொடக்கம்
78 சாக சகாப்தம் தொடக்கம்.
120 கனிஷ்கர் அரியணை ஏறினார்.
320 குப்தர் பேரரசு தொடக்கம்.இந்து இந்தியாவின் பொற்காலம்.
380 விக்கிரமாதித்தர் அரியணை ஏறினார்.
405-411 சீன பயணி பாஹியான் இந்தியா வருகை.
415 முதலாம் குமர குப்தர் அரியணை ஏறினார்.
455 ஸ்கந்த குப்தர் அரியணை ஏறினார்.
606-647 ஹர்ஷவர்தரின் ஆட்சி காலம்.
712 சிந்து பகுதியில் அரேபியர்களின் முதல் படையெடுப்பு.
836 கண்ணோசியில் போஜ அரசர் அரியணை ஏறினார்.
985 சோழ அரசர் இராஜராஜன் அரியணை ஏறினார்.
998 சுல்தான் முகமது அரியணை ஏறினார்.
1001 முதல் இந்திய படையெடுப்பில் பஞ்சாபை ஆண்ட மன்னன் ஜெய்பாலை முகமது சலானி தோற்கடித்தார்.
1025 முகமது கஜினியால் சோமநாத் கோயில் அழிக்கப்பட்டது.
1191 முதல் தரெய்ன் போர்.
1192 இரண்டாம் தரெய்ன் போர்.
1206 டெல்லி சிம்மாசனத்தில் குதுபுத்தீன் ஐபக் அரியணை ஏறினார்.
1210 குதுபுத்தீன் ஐபக் இறந்தார்.
1221 செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுப்பு (மங்கோல் படையெடுப்பு)
1236 ரசியா சுல்தான் டெல்லி அரியணை ஏறினார்.
1240 ரசியா சுல்தான் இறந்தார்.
1296 அலாவுதீன் கில்ஜி அரியணை ஏறினார்.
1316 அலாவுதீன் கில்ஜி இறந்தார்.
1325 முகமது பின் துக்ளக் அரியணை ஏறினார்.
1327 முகமது பின் துக்ளக்கால் தலைநகரம் டெல்லியிலிருந்து தெளலாபாத்திற்கு மாற்றப்பட்டது.
1336 தெற்கில் விஜயநகர பேரரசு உருவாக்கப்பட்டது.
1351 பிரோஸ் ஷா அரியணை ஏறினார்.
1398 இந்தியாவின் மீது தைமூர் லாங் படையெடுத்தார்.
1469 குருநானக் பிறந்தார்.
1494 பார்கானாவில் பாபர் அரியணை ஏறினார்.
1497-98 வாஸ்கோடாகாமா முதல் முறையாக கடல் மார்க்கம் வழியாக இந்தியாவுக்கு வருகை புரிந்தார். (இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் மார்க்கம் கண்டுபிடிக்கப்பட்டது).
1526 முதலாம் பானிப்பட்டு போர் நடைபெற்றது. பாபரால் இப்ராஹிம்லோடி தோற்கடிக்கப்பட்டார். முகலாய அரசு தோற்றுவிக்கப்பட்டது.
1527 கான்வாவில் நடைபெற்ற போரில் பாபர் ராணாசங்காவை தோற்கடித்தார்.
1530 பாபர் இறந்தார். ஹீ மாயூன் அரியணை ஏறினார்.
1539 ஷெர்ஷா சூரி, ஹீமாயூனை தோற்கடித்து இந்தியாவின் சக்கரவர்த்தி ஆனார்.
1540 கன்னோசிப் போர்.
1555 ஹீமாயூன் மீண்டும் டெல்லியை கைப்பற்றினார்.
1556 இரண்டாம் பானிப்பட்டு போர்.
1565 தலைக்கோட்டை போர்.
1576 ஹல்திகாட்டி போர், இராண பிரதாப் அக்பரால் தோற்கடிக்கப்பட்டார்.
1582 “தீன் ஏ இலாஹி” அக்பர் துவக்கினார்
1597 இராணபிரதாப் இறந்தார்.
1600 கிழக்கிந்திய கம்பெனி தோற்றுவிக்கப்பட்டது.
1605 அக்பர் இறந்தார். ஜஹாங்கீர் அரியணை ஏறினார்.
1606 குரு அர்ஜுன் தேவ் தூக்கிலிடப்பட்டார்.
1611 ஜஹாங்கீர் நூர்ஜஹானை மணந்தார்.
1616 சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரை சந்தித்தார்.
1627 சிவாஜி பிறந்தார். ஜஹாங்கீர் இறந்தார்.
1628 ஷாஜகான் இந்திய சக்கரவர்த்தி ஆனார்.
1631 மும்தாஜ் மகால் இறந்தார்.
1634 இந்தியாவின் வங்கத்தில் வியாபாரம் செய்ய ஆங்கிலேயர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
1659 ஒளரங்கசீப் அரியணை ஏறினார். ஷாஜகான் சிறைப்படுத்தப்பட்டார்.
1665 சிவாஜி ஒளரங்கசீப்பால் சிறைப்படுத்தப்பட்டார்.
1666 ஷாஜகான் இறந்தார்.
1675 9 வது சீக்கிய குரு தேக் பகதூர் தூக்கிலிடப்பட்டார்.
1680 சிவாஜி இறந்தார்.
1707 ஒளரங்கசீப் இறந்தார்.
1708 குரு கோவிந்த் சிங் இறந்தார்.
1739 நதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார்
1757-பிளாசிப் போர், கிளைவ் லார்ட் தலைமையில் இந்தியாவில் ஆங்கிலேய அரசியல் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1761-மூன்றாம் பானிப்பட்டுப் போர், இரண்டாம் ஷா ஆலம் இந்தியாவின் பேரரசர் ஆனார்.
1764-பக்‌ஷர் போர்.
1765-கிழக்கிந்திய கம்பெனிக்கு கிளைவ் இந்தியஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1767-69-முதலாம் மைசூர் போர்.
1770-வங்கத்தின் பெருந்துயரம்.
1780-மகாராஜா ரஞ்சித் சிங் பிறந்தார்.
1780-84-இரண்டாம் மைசூர் போர்.
1784-பிட்ஸ் ஓம்டா சட்டம்.
1790-92 மூன்றாம் மைசூர் போர்.
1793 ஆங்கிலேயர்கள் வங்கத்தில் நிரந்தர குடியேற்றம்.
பதிவு நன்றி: நேச விழுதுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக