புதன், அக்டோபர் 12, 2016

அமிர்தகடேஸ்வரர் திருகோயில்

மார்கண்டேயர் வழி பட்டு என்றும் பதினாறு வயதினராக இருந்ததால் அமிர்தகடேஸ்வரர் திருகோயிலுக்கு ஆயுள் விருத்தி வேண்டுவோர் செல்வதுண்டு .
நளன் வழிபட்டு சனி தோஷம் நீங்கியதால் ஏழரை சனியால் பீடிக்க பட்டவர்கள் திருநள்ளாறு போவதுண்டு
அது போல் பதவி உயர்வு, தொழில் துறையில் சிறந்து விளங்க விரும்புவர்கள் சில குறிப்பிட்ட கோயில்களுக்கு போக வேண்டும். அது என்ன கோயில் தெரியுமா?
இந்திரன் வழிபட்ட கோயில்களுக்கு சென்றால் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சி நிச்சயம் பெறுவார்.
பதவி உயர்வு, தொழில் துறையில் சிறந்து விளங்க விரும்புவர்கள் சில குறிப்பிட்ட கோயில்களுக்கு போக வேண்டும். அது என்ன கோயில் தெரியுமா?
அத்திமுகம் ஐயரவதேஷ்வர் சிவ பெருமான்கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து 23கிமீ தொலைவில் உள்ளது அத்திமுகம் கிராமம் . 1800 வருடம் பழமையான திருகோயிலில் இரட்டை சந்நிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் அருள் பாலித்து வருகிறார்.
சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் காட்சி தருகிறார் , அதே கருவறையில் அம்மையும் எழுந்தருளி இருப்பது மிக விசேஷம்.
கோயிலின் மட்டம் ஊரில் இருந்து 15 அடி கிழே உள்ளது.திருசெந்தூர் முருகன் கோயில் கடல் மட்டத்தை விட கீழே இருக்கும்.திருசெந்தூர் முருகனை இறங்கி போய் தரிசனம் செய்தல் தொழில் துறையில், வாழ்க்கையில் நம்மை மேலே ஏற்றி விடுவார் என்பது நம்பிக்கை.
அது போல இங்கே கீழே இறங்கி போய் ஐராவத ஈஷ்வரரை தரிசனம் செய்து மன குறைகளை சொல்லி அழுதால் அவர் வேண்டியவர்களுக்கு வேண்டியதை கொடுத்து வாழ்கையில் ஏற்றம் கொடுத்த நிகழ்வுகள் பல பல.
இந்திரன் பதவி ஆசை பிடித்தவர் தனது பதவியை காப்பற்றிக்கொள்ளவே பல சிக்கல்களில் மாட்டி கொள்வர். அவர் செய்த பல வழிபாடுகள் தனது பதவியை காப்பாற்ற என்பதால் இந்திரன் வழிபட்ட லிங்கங்கள் யாவும் தொழில் விருத்திக்கு பலன் கொடுக்கும்.
திருவண்ணாமலை கிரி வல பாதையில் முதல் லிங்கமே இந்திர லிங்கம் தான்.
விஷயம் தெரிந்தவர்கள் தொழில் வளர்சிக்காக இந்திர லிங்கத்தை சிறப்பாக வழிபாட்டு செல்வர்.
இந்த அத்திமுகம் கோயிலில் இருப்பதும் இந்திரன் வழிபட்ட சுயம்பு லிங்கம் தான்.ஆகையால் தொழில் முனைவோர், வேலை வேண்டுவோர் , பதவி உயர்வுக்காக காத்து கிடப்போர் இங்கு வந்து வழிபாடு செய்தால் நல்ல பலனை பெறலாம்.
ஹோசூரை பூர்விகமாக கொண்ட பலருக்கே இந்த கோயில் இருப்பது தெரியாது.
ஒவ்வொரு கோயிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பிரபலமாகும் அங்கே இருக்கும் மூலவர் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மிகுந்த ஆற்றலோடு இருப்பார்.
இந்த ஐயரவதேஷ்வர் கோயில் தற்போது வெளி உலகுக்கு தெரிய வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளது.
இந்த சமயத்தில் இங்கு சென்று வழிபடும் வாய்ப்பு கிடைக்க வேண்டியவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
இந்த செய்தியை நீங்கள் தற்போது படித்து கொண்டு இருந்தால் அப்படி பட்ட வாய்ப்பு கிடைக்க பெற்றவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இத்தலத்தின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
திரேதா யுகத்தில் விருதிரசுரனுடனான போரில் இந்திரன் அரக்கனை கொன்று அழிகின்றான். அரக்கனை கொன்றது முனிவர்களையும் தேவர்களையும் காக்க தான் என்றாலும் ஒரு உயிரை கொன்ற பாவம் ப்ரமஹத்தியாய் இந்திரனையும் போரில் அவனுக்கு உதவி புரிந்த அவனது வாகனம் ஐராவதத்தையும் பிடிக்கின்றது .
பிரமஹத்தி தோஷத்தால் தன் ஆற்றலையும் பொலிவையும் இழந்த இந்திரன் மீண்டும் இந்திரா லோகம் செல்ல முடியாமல் பூவுலகிலேயே சிக்கி தவிகிறார்கள்.
பல தலங்களுக்கு சென்று பிரமஹத்தி தோஷம் தொலைய பூஜை செய்கிறார்கள். அதன் பலனாக வானத்தில் ஒரு அசரீரி கேட்கிறது.
அகஸ்திய நதிக்கரை ஓரம் இருக்கும் சுயம்பு லிங்கத்தை கண்டு பிடித்து 48 நாட்கள் பூசை செய்தால் அவ்விருவரையும் விட்டு பிரமஹத்தி தோஷம் நீங்கும் என்று அவ்வசரீரி கூறுகின்றது.
உடனே இந்திரனும் அவனது யானையும் அகஸ்திய நதியை தேடி செல்கின்றனர். அங்கே சென்று நதி கரை ஓரத்தில் சுயம்பு லிங்கத்தை தேடி அலைகின்றனர்.
பளிங்கு போன்ற நதி கரை ஓரத்தில் சுற்றி வில்வ மரங்கள் சூழ அற்புதமாக வீற்றிருந்தார் சுயம்பு லிங்க பெருமான்.
மிகுந்த மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் ஐராவதமும் சுயம்பு லிங்கத்தை சுற்றி பீடம் அமைத்து பூசை ஏற்பாடுகளை செய்தனர்.
மறு நாள் காலையில் நியமப்படி பூசைகளை செய்தனர். இப்படி விடாமல் 48 நாட்கள் பக்தி சிரத்தையோடு பூசை செய்தனர்.
அவர்களின் பூசையில் மனம் குளிர்ந்த சிவ பெருமான் 48ம் நாள் அவர்களுக்கு காட்சி கொடுத்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி இந்திர லோகத்தை மீண்டும் அளித்தார்.
ஐராவதத்தின் பக்தியை மெச்சி சுயம்பு லிங்கத்தில் இறைவனே ஐராவதத்தின் உருவத்தையும் பொரித்து அதற்கு இரவதேஷ்வர் என்று பெயரும் தந்தருளினார்.
சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் நாகேஸ்வரர் சிலையில் பாம்பு உருவம் இருக்கும். அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் யானை உருவத்தைக் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.
வெளிபிரகாரத்தில் அட்சரமாலையுடன் கணபதி வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.
யானை- ஹஸ்தி முகம் பொறிக்கப்பட்டதால் அந்த கிராமம் அன்று முதல் ஹஸ்தி முகம் என்று அழைக்க படுகிறது.
இத்தலத்தில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. 1800 வருட பழமையான ஸ்தல விருட்சம் வில்வ மரம் ஒன்று உள்ளது.
மிக உயரமான வில்வ மரமான அவ்விருட்சம் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
ஊருக்கு கிழே 15அடி ஆழத்தில் தன இந்த கோயில் உள்ளது
.
அற்புதமான பஞ்ச லிங்க சந்நிதி உள்ளது.
நீண்ட வரிசையில் ஒவ்வொரு லிங்கமும் ஒவ்வொரு உருவத்தில்,அளவில் தனி தனி நந்திகளோடு வீற்றிருப்பது அற்புதமான காட்சி
.
ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால் காமாட்சி அம்மனும் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர்.இங்குள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை ஒழித்து ஞானத்தை வழங்குகிறார்.எனவே தான் இவர் “சம்கார தெட்சிணாமூர்த்தி”எனப்படுகிறார்.
இங்கு இரண்டு மூலவர்கள் உள்ளனர். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும்,அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள்.
தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது.ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகிப் பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை அறியலாம
தை மாதத்தில் சூரியனின் கதிர்கள் சுயம்பு லிங்கத்தில் படுவதால் நந்தியம்பெருமான் இங்கே சட்ட்று விலகி இருக்கிறார்.
நந்தி விலகிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
மற்றொரு அற்புதம் இங்கே உள்ள நவக்ரஹ சந்நிதி . இங்கே உ ள்ள நவக்ரகங்கள் எங்கும் காண முடியாத அதிசயமாக அமர்ந்த நிலையில் அமைதியாக உள்ளன. ஆகையால் இது நவக்ரஹ தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகின்றது.
கோயிலுக்கு செல்ல உகந்த நேரம் பிரதோஷ காலமாகும்.
இங்கு பிரதோஷ வழிபாடு மிக சிறப்பாக நடை பெறுகிறது. தீட்சை பெற்ற சிவனடியர்களால் தேவார திருவாசக பதிகங்கள் ஓதப்படுகின்றது
மேலும் இங்கு வரும் பக்தர்களும் இப்பதிகங்களை ஓத புத்தகங்களும் தர படுகின்றது. ஆகையால் பிரதோஷத்திற்கு வரும் பக்தர்கள் இங்கு தங்கள் மனமார ,இறைவன் செவி குளிர, தத்தம் வாயார பதிகங்களை பாடி தமது குறைகளை களைந்து கொள்ளலாம்.
bus route from hosur to Athimugam: 15,24,33,47,48.
சூளகிரியில் இருந்தும் அத்திமுகதிற்கு பேருந்துகள் உண்டு
.
இத்தகைய சிறப்பு மிக்க ஸ்தலத்தில் இப்போது புனரமைப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றன.
அன்பர்கள் நேரில் வந்து அருள் பெற்று ஆலய திருப்பணியில் ஈடுபட்டு சிவ புண்ணியம் தேடுமாறு கேட்டு கொள்ள படுகின்றது
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து,புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


தகவல் உதவி: தேவகி மோகன்