புதன், அக்டோபர் 12, 2016

அமிர்தகடேஸ்வரர் திருகோயில்

மார்கண்டேயர் வழி பட்டு என்றும் பதினாறு வயதினராக இருந்ததால் அமிர்தகடேஸ்வரர் திருகோயிலுக்கு ஆயுள் விருத்தி வேண்டுவோர் செல்வதுண்டு .
நளன் வழிபட்டு சனி தோஷம் நீங்கியதால் ஏழரை சனியால் பீடிக்க பட்டவர்கள் திருநள்ளாறு போவதுண்டு
அது போல் பதவி உயர்வு, தொழில் துறையில் சிறந்து விளங்க விரும்புவர்கள் சில குறிப்பிட்ட கோயில்களுக்கு போக வேண்டும். அது என்ன கோயில் தெரியுமா?
இந்திரன் வழிபட்ட கோயில்களுக்கு சென்றால் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சி நிச்சயம் பெறுவார்.
பதவி உயர்வு, தொழில் துறையில் சிறந்து விளங்க விரும்புவர்கள் சில குறிப்பிட்ட கோயில்களுக்கு போக வேண்டும். அது என்ன கோயில் தெரியுமா?
அத்திமுகம் ஐயரவதேஷ்வர் சிவ பெருமான்கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து 23கிமீ தொலைவில் உள்ளது அத்திமுகம் கிராமம் . 1800 வருடம் பழமையான திருகோயிலில் இரட்டை சந்நிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் அருள் பாலித்து வருகிறார்.
சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் காட்சி தருகிறார் , அதே கருவறையில் அம்மையும் எழுந்தருளி இருப்பது மிக விசேஷம்.
கோயிலின் மட்டம் ஊரில் இருந்து 15 அடி கிழே உள்ளது.திருசெந்தூர் முருகன் கோயில் கடல் மட்டத்தை விட கீழே இருக்கும்.திருசெந்தூர் முருகனை இறங்கி போய் தரிசனம் செய்தல் தொழில் துறையில், வாழ்க்கையில் நம்மை மேலே ஏற்றி விடுவார் என்பது நம்பிக்கை.
அது போல இங்கே கீழே இறங்கி போய் ஐராவத ஈஷ்வரரை தரிசனம் செய்து மன குறைகளை சொல்லி அழுதால் அவர் வேண்டியவர்களுக்கு வேண்டியதை கொடுத்து வாழ்கையில் ஏற்றம் கொடுத்த நிகழ்வுகள் பல பல.
இந்திரன் பதவி ஆசை பிடித்தவர் தனது பதவியை காப்பற்றிக்கொள்ளவே பல சிக்கல்களில் மாட்டி கொள்வர். அவர் செய்த பல வழிபாடுகள் தனது பதவியை காப்பாற்ற என்பதால் இந்திரன் வழிபட்ட லிங்கங்கள் யாவும் தொழில் விருத்திக்கு பலன் கொடுக்கும்.
திருவண்ணாமலை கிரி வல பாதையில் முதல் லிங்கமே இந்திர லிங்கம் தான்.
விஷயம் தெரிந்தவர்கள் தொழில் வளர்சிக்காக இந்திர லிங்கத்தை சிறப்பாக வழிபாட்டு செல்வர்.
இந்த அத்திமுகம் கோயிலில் இருப்பதும் இந்திரன் வழிபட்ட சுயம்பு லிங்கம் தான்.ஆகையால் தொழில் முனைவோர், வேலை வேண்டுவோர் , பதவி உயர்வுக்காக காத்து கிடப்போர் இங்கு வந்து வழிபாடு செய்தால் நல்ல பலனை பெறலாம்.
ஹோசூரை பூர்விகமாக கொண்ட பலருக்கே இந்த கோயில் இருப்பது தெரியாது.
ஒவ்வொரு கோயிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பிரபலமாகும் அங்கே இருக்கும் மூலவர் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மிகுந்த ஆற்றலோடு இருப்பார்.
இந்த ஐயரவதேஷ்வர் கோயில் தற்போது வெளி உலகுக்கு தெரிய வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளது.
இந்த சமயத்தில் இங்கு சென்று வழிபடும் வாய்ப்பு கிடைக்க வேண்டியவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
இந்த செய்தியை நீங்கள் தற்போது படித்து கொண்டு இருந்தால் அப்படி பட்ட வாய்ப்பு கிடைக்க பெற்றவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இத்தலத்தின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
திரேதா யுகத்தில் விருதிரசுரனுடனான போரில் இந்திரன் அரக்கனை கொன்று அழிகின்றான். அரக்கனை கொன்றது முனிவர்களையும் தேவர்களையும் காக்க தான் என்றாலும் ஒரு உயிரை கொன்ற பாவம் ப்ரமஹத்தியாய் இந்திரனையும் போரில் அவனுக்கு உதவி புரிந்த அவனது வாகனம் ஐராவதத்தையும் பிடிக்கின்றது .
பிரமஹத்தி தோஷத்தால் தன் ஆற்றலையும் பொலிவையும் இழந்த இந்திரன் மீண்டும் இந்திரா லோகம் செல்ல முடியாமல் பூவுலகிலேயே சிக்கி தவிகிறார்கள்.
பல தலங்களுக்கு சென்று பிரமஹத்தி தோஷம் தொலைய பூஜை செய்கிறார்கள். அதன் பலனாக வானத்தில் ஒரு அசரீரி கேட்கிறது.
அகஸ்திய நதிக்கரை ஓரம் இருக்கும் சுயம்பு லிங்கத்தை கண்டு பிடித்து 48 நாட்கள் பூசை செய்தால் அவ்விருவரையும் விட்டு பிரமஹத்தி தோஷம் நீங்கும் என்று அவ்வசரீரி கூறுகின்றது.
உடனே இந்திரனும் அவனது யானையும் அகஸ்திய நதியை தேடி செல்கின்றனர். அங்கே சென்று நதி கரை ஓரத்தில் சுயம்பு லிங்கத்தை தேடி அலைகின்றனர்.
பளிங்கு போன்ற நதி கரை ஓரத்தில் சுற்றி வில்வ மரங்கள் சூழ அற்புதமாக வீற்றிருந்தார் சுயம்பு லிங்க பெருமான்.
மிகுந்த மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் ஐராவதமும் சுயம்பு லிங்கத்தை சுற்றி பீடம் அமைத்து பூசை ஏற்பாடுகளை செய்தனர்.
மறு நாள் காலையில் நியமப்படி பூசைகளை செய்தனர். இப்படி விடாமல் 48 நாட்கள் பக்தி சிரத்தையோடு பூசை செய்தனர்.
அவர்களின் பூசையில் மனம் குளிர்ந்த சிவ பெருமான் 48ம் நாள் அவர்களுக்கு காட்சி கொடுத்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி இந்திர லோகத்தை மீண்டும் அளித்தார்.
ஐராவதத்தின் பக்தியை மெச்சி சுயம்பு லிங்கத்தில் இறைவனே ஐராவதத்தின் உருவத்தையும் பொரித்து அதற்கு இரவதேஷ்வர் என்று பெயரும் தந்தருளினார்.
சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் நாகேஸ்வரர் சிலையில் பாம்பு உருவம் இருக்கும். அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் யானை உருவத்தைக் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.
வெளிபிரகாரத்தில் அட்சரமாலையுடன் கணபதி வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.
யானை- ஹஸ்தி முகம் பொறிக்கப்பட்டதால் அந்த கிராமம் அன்று முதல் ஹஸ்தி முகம் என்று அழைக்க படுகிறது.
இத்தலத்தில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. 1800 வருட பழமையான ஸ்தல விருட்சம் வில்வ மரம் ஒன்று உள்ளது.
மிக உயரமான வில்வ மரமான அவ்விருட்சம் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
ஊருக்கு கிழே 15அடி ஆழத்தில் தன இந்த கோயில் உள்ளது
.
அற்புதமான பஞ்ச லிங்க சந்நிதி உள்ளது.
நீண்ட வரிசையில் ஒவ்வொரு லிங்கமும் ஒவ்வொரு உருவத்தில்,அளவில் தனி தனி நந்திகளோடு வீற்றிருப்பது அற்புதமான காட்சி
.
ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால் காமாட்சி அம்மனும் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர்.இங்குள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை ஒழித்து ஞானத்தை வழங்குகிறார்.எனவே தான் இவர் “சம்கார தெட்சிணாமூர்த்தி”எனப்படுகிறார்.
இங்கு இரண்டு மூலவர்கள் உள்ளனர். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும்,அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள்.
தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது.ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகிப் பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை அறியலாம
தை மாதத்தில் சூரியனின் கதிர்கள் சுயம்பு லிங்கத்தில் படுவதால் நந்தியம்பெருமான் இங்கே சட்ட்று விலகி இருக்கிறார்.
நந்தி விலகிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
மற்றொரு அற்புதம் இங்கே உள்ள நவக்ரஹ சந்நிதி . இங்கே உ ள்ள நவக்ரகங்கள் எங்கும் காண முடியாத அதிசயமாக அமர்ந்த நிலையில் அமைதியாக உள்ளன. ஆகையால் இது நவக்ரஹ தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகின்றது.
கோயிலுக்கு செல்ல உகந்த நேரம் பிரதோஷ காலமாகும்.
இங்கு பிரதோஷ வழிபாடு மிக சிறப்பாக நடை பெறுகிறது. தீட்சை பெற்ற சிவனடியர்களால் தேவார திருவாசக பதிகங்கள் ஓதப்படுகின்றது
மேலும் இங்கு வரும் பக்தர்களும் இப்பதிகங்களை ஓத புத்தகங்களும் தர படுகின்றது. ஆகையால் பிரதோஷத்திற்கு வரும் பக்தர்கள் இங்கு தங்கள் மனமார ,இறைவன் செவி குளிர, தத்தம் வாயார பதிகங்களை பாடி தமது குறைகளை களைந்து கொள்ளலாம்.
bus route from hosur to Athimugam: 15,24,33,47,48.
சூளகிரியில் இருந்தும் அத்திமுகதிற்கு பேருந்துகள் உண்டு
.
இத்தகைய சிறப்பு மிக்க ஸ்தலத்தில் இப்போது புனரமைப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றன.
அன்பர்கள் நேரில் வந்து அருள் பெற்று ஆலய திருப்பணியில் ஈடுபட்டு சிவ புண்ணியம் தேடுமாறு கேட்டு கொள்ள படுகின்றது
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து,புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


தகவல் உதவி: தேவகி மோகன்

சனி, ஆகஸ்ட் 27, 2016

வரலாறு பற்றிய உணர்வை எப்படி மாணவர்களுக்கு கொண்டு வருவது?

வரலாறு பற்றிய உணர்வை எப்படி மாணவர்களுக்கு கொண்டு வருவது?
ஒரு நான்காம் வகுப்பு மாணவனை எடுத்துக் கொள்வோம். அவனு(ரு)க்கு எப்படி வரலாறு பற்றிய உணர்வைக் கொண்டு வருவது.
அதற்கு முன்னால் ”நேரம்” பற்றிய மனநிலையை எப்படி ஒருவருக்கு உருவாக்குகிறோம் என்பதை யோசிக்கலாம்.
-முதலில் ஒரு குழந்தை பகல் இரவு என்பதை அறிந்து கொள்கிறது. இதை யாரும் அதற்கு சொல்லித் தரத் தேவையில்லை. இவ்வறிவை அதுவாகவே உணர்ந்து கொள்கிறது.
-அடுத்து பகலில் வெவ்வேறு பொழுதகளை முதலில் அறிகிறது. காலை மதியம் மாலை. இதுவும் சூரியனின் சுழற்சியை (பூமியின் சுழற்சியை) வைத்து நிழலை வைத்து குழந்தை தெரிந்து கொள்கிறது.
-இரவை இரண்டே இரண்டு பகுதியாக பிரிக்கிறது. இரவில் தூங்குவதற்கு முந்தைய காலம். தூங்கும் காலம்.
-ஆக ஒரு மனிதன் பிறந்து சில வருடங்கள் வரை, கடிகாரம் வந்த பிறகு கூட, கடிகாரத்தை எடுத்து காலம் பற்றிய அறிவை பெறுவதில்லை. கடிகாரம் இல்லாமலேயே அதை பெரிதாக முதலில் வகுத்துக் கொள்கிறான்.
இதே முறையைத்தான் வரலாறு பற்றி மாணவர்களுக்கு அல்லது நம் வீட்டு பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும் உபயோகப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.
-எப்படி ஒரு குழந்தை இரவு பகலை பெரும் பிரிவாக பிரிக்கிறதோ அது போல வரலாறை பெரும் பிரிவாக பிரிக்க முதலில் கற்றுத் தரவேண்டும். அதை எப்படி செய்யலாம்.
- வீட்டுச் சுவரில் பெரிய சார்டை ஒட்டி வையுங்கள். அதில் நீளமான கோட்டை வரையுங்கள். (சார்ட்டின் மேல் பகுதியில்)
- கோட்டின் வலது அற்றத்தில் ஒரு புள்ளியை வைத்து இன்றைய தேதி வருடத்தை எழுதுங்கள் “இப்ப நாம எங்க இருக்கோம். இப்ப நாம 2016 யில இருக்கோம். 2016 ன்னா
என்ன? 1,2,3,.4 ... அப்படி எண்ணி எண்ணி 100 வரைக்கும், அது மாதிரி 100,200,300, அப்படி எண்ணி 1000 வரைக்கும். அத 1000, 2000 ம்ன்னு எண்ணினா 2000 வருசம். அதுகூட 16 எண்ணக் கூட்டினா அதுதான் நாம இப்ப இருக்கிற வருசம்” என்று சொல்லலாம்.
-கோட்டின் இடது மூலை அற்றத்தில் ஒரு புள்ளியை வைத்து. “ஒது என்னது. இத ஒண்ணாவது வருசம்னு சொல்லுவோம். இத ஞாபகம் வைக்க ஜீஸஸ் பிறந்த நாள வெச்சுக்குவோம். ஒண்ணாவது வருசத்துல ஜூஸஸ் பிறந்தாருன்னு வெச்சுக்க்க” என்று சொல்லி “ஜீஸஸ் பிறந்தார்” என்று குறிக்க வேண்டும்.
-இப்போது குழந்தைக்கு காலத்தில் முதல்கட்ட ஆரம்பமும் அதன் தொடர்ச்சியான இன்றைய தேதி பற்றியும் ஒரு அடிப்படை அறிவு வருகிறது. 1 டூ 2016 பற்றி அதற்கு தெரிகிறது.
-இப்போது நடுவில் ஒரு கோடு போடுங்கள். சரியாக நடுவில். அதில் 1000 மாவது வருசம் என்று மார்க் செய்து. அதில் ”ராஜ ராஜ சோழன் பிறப்பு” என்று எழுதுங்கள். இப்போது சொல்லுங்கள் “சரி முதல் வருசம் இயேசு பிறக்கிறாரு, அடுத்து நடுவுல ஆயிரமாவது வருசம் ராஜராஜ சோழன் பிறக்கிறாரு. அதற்கடுத்த ஆயிரமாவது வருசம் நாம பிறந்து இட்லி சாப்பிட்டுட்டு இருக்கிறோம் அப்படித்தானே” என்று கேட்க வேண்டும்.
-எப்படி இரவு பகலை முதலில் பிரிக்கிறோமோ அதுமாதிரி இந்த வரலாறு ஸ்கேலான
1- இயேசு
1000- ராஜ ராஜ சோழன்
2016 - நாம் அல்லது நீ
என்ற ”வரலாறு ஸ்கேலை” குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். இந்த முதல் ஸ்கேலைப் புரிய வைத்தால் வரலாறை விஞ்ஞானப்பூர்வமாய் உணர்வதற்கான அடிப்படையை உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தித் தருகிறீர்கள் என்று அர்த்தம்.
-மறுபடி 1- 1000 என்னும் புள்ளிகளுக்கு நடுவே 500 வது இடத்தில் ஒரு மார்க் பண்ணுங்கள். 500 யில் குப்தர்கள் காலம்/ அழிவு என்று எழுதுங்கள். 1000- 2016 வருடம் நடுவே மார்க் பண்ணி 1500 வருடம் - ஐரோப்பியர்கள் மொத்தமாய் உள்ளே நுழைய ஆரம்பித்த வருடம் என்று எழுதுங்கள்.
-இப்போது வரலாறு ஸ்கேல் இன்னும் விரிவடைகிறது.
1- இயேசு
500 - குப்தர்களின் காலம்
1000- ராஜ ராஜ சோழன்
1500 -ஐரோப்பியர்கள் வருகை.
2016 - நாம் அல்லது நீ
- இப்படி வரலாறு ஸ்கேலை விரிக்க வேண்டும். முதலில் விரிவாக விரிக்கும் போது சம்பவம் அதே வருடத்தில் நடக்கத் தேவையில்லை. பக்கத்தில் இருந்தால் போதும். பெரிய சம்பவமாக நன்றாக மனதில் நிற்கும் சம்பவமாக சுவாரஸ்யமான சம்பவமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
-இப்போது ஒன்றிலிருந்து 500 வரைக்கும் தனியே ஒரு கோட்டை வரையுங்கள். அப்படிப் போங்கள்.
1-500 ஒரு நீண்ட கோடு
500-1000 ஒரு நீண்ட கோடு
1000-1500 ஒரு நீண்ட கோடு
1500 -2016 ஒரு நீண்ட கோடு.
- ஒவ்வொரு 500 வருசத்தையும் ஐந்தாகப் பிரியுங்கள். பிரித்து மார்க் செய்துவிடுங்கள். அந்த அந்த நூறு வருடத்துக்கான வரலாறு சம்பவத்தை அவ்வப்போது ஜாலியாகப் பேசி அதில் எழுதி வையுங்கள். கிட்டத்தட்ட பக்கத்தில் இருந்தால் போதும்.
-எப்படி எண்கள் படிக்கும் போது 0,1,2,3... என்று முதலில் போவோமா அப்படி முதலில் கிபி 0,500,1000,2016 என்று போய்விட்டு, அதில் மாணவர்கள் தெளிந்த பிறகு எண்களில் -1,-2,-3 ... என்று போவதற்கு கற்றுக்கொடுப்பது போல கிமு பகுதியைக் கற்றுக் கொடுக்கலாம்.
-எடுத்த உடனே கிமு கிபி போகத் தேவையில்லை (என் கருத்து) கிபியை முடித்து வரலாறு ஸ்கேல் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்துவது முக்கியம்.
ஏன் இந்த வரலாறு ஸ்கேலை ஒரு மாணவன் எட்டு வயதில் படிக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லுகிறேன் என்றால் பொதுவாக நமக்கு ஒரு பழமையின் மூலம் பற்றிய விழிப்பே இல்லை.
உதாரணமாக ”ஷிரிடி சாய்பாபா” என்று சொல்கிறோம். அவர் எவ்வளவு பழமையானவர் என்று ஒரு பொது ஜனத்தைக் கேட்டுப் பாருங்கள். “அவரு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே வாழ்ந்தவர்” என்ற மனபிம்பத்தைதான் கொண்டிருப்பார்கள். ஷிரிடி சாய்பாபா 1835 ஆண்டு பக்கத்தில் பிறந்தவர்.
ரமணர் பிறந்தது 1879 யில். அம்பேத்கர் பிறந்தது 1891 ஆம் ஆண்டில். ரமணருக்கும் அம்பேத்கருக்கும் வயது வித்தியாசம் 12 ஆண்டுகள்.
ஆனால் ஒரு பொது ஜனம் அம்பேத்கர் பற்றி என்ன பிம்பம் வைத்திருப்பார். ரமணர் பற்றி என்ன பிம்பம் வைத்திருப்பார் என்று ஒரு பொது ஜனமாகவே நின்று யோசித்துப் பாருங்கள். ரமணரை மிகப் பழமையானவர் என்றும் அம்பேத்கர் இப்போதைய காலத்தில் உள்ளவர் மாதிரியும் ஒரு எண்ணம் இருக்கும்.
வள்ளலார் எப்போது பிறந்தார் 1823 ஆண்டு பிறந்தார். நானெல்லாம் வள்ளலார் பல் நூறு வருடங்கள் முன்பு பிறந்தவர் என்றுதான் குழந்தையில் நினைத்திருக்கிறேன்.
இப்படி குழந்தையில் இருந்தே நமக்கு வரலாறு பற்றிய விழிப்பு, இறந்த காலம் பற்றிய விழிப்பு இல்லாமல் போகிறது,
இந்த விழிப்பு வரும்போதுதான் வரலாறு என்பது நமக்கு ஒரு அறிவியல் நிலையாக படியும். அப்படி படியும் போது நாம் பல மயக்கங்களில் இருந்து போலித்தனங்களில் இருந்து விடுதலையாவோம்.
உங்கள் வீட்டில் சார்ட் ஒட்டி விட்டீர்க்ளா?
வரலாறு ஸ்கேல் வரைந்து விட்டீர்களா ?  
பின்குறிப்பு : இதே விஷயத்தை அன்று பள்ளி மாணவர்களிடம் உரையாற்றும் போது சுருக்கமாக சொன்னேன்.
நன்றி: 
Vijay Bhaskarvijay

வியாழன், ஜூலை 14, 2016

மஞ்சள் காமாலை - ஒரு முழுமை தகவல்

நன்றி : Mariano Anto Bruno Mascarenhas 

மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டிய மரணங்களும்
**********************************************************************************
உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். (நோய்க்குறி)
இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.
1. திரையில் தவறு / கோளாறு / பிரச்சனை
2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு / கோளாறு / பிரச்சனை
3. கணினியில் தவறு / கோளாறு / பிரச்சனை
இது போல் பல காரணங்களினாலும் திரையில் ஒன்றும் தெரியாது.
திரையில் ஒன்றும் தெரியவில்லை என்றால் அதற்கு ஒரே தீர்வுதான் என்றால் நம்புவீர்களா
ஆனால்
கழுதை விட்டையை ஆட்டின் சிறுநீரில் கரைத்து ஒவ்வொரு நாழிகையும் ஏழு சொட்டு சாப்பிட்டால் அனைத்து வித காரணங்களினால் வரும் மஞ்சள் காமாலையும் தீர்ந்து விடும் என்று யாராவது மஞ்சள் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, சமூக ஊடகங்களிலோ எழுதினால் அதை அப்படியே நம்பி "மிக்க நன்றி" என்று பதில் கூறும், அந்த தகவல்களை பகிரும், மேலனுப்பும் புத்திசாலிகள் நிறைய பேர் உள்ளனர்
-oOo-
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.
ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும். (பலவித காரணங்களினால் திரையில் படம் தெரியாமல் இருக்கலாம்)
இதனால் தான் மூடநம்பிக்கை மருத்துவ முறைகள் நோய்குறிகளையே நோயாக கருதி தவறான சிகிச்சை அளித்து மக்களை கொன்றுவிடுகின்றன
-oOo-
இப்பொழுது மஞ்சள் காமாலைக்கு வருவோம்
அதற்கு முன் கொஞ்சம் அடிப்படை மருத்துவம் பயிலலாம்.
இரத்ததில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
இதில் சிவப்பணுவினுள் (Red Blood Cells - RBC) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது.
சிவப்பணுக்கள் சாகா வரம் பெற்றவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட காலம் பணி செய்த பின் இறந்து விடுகின்றன. அப்படி மரணித்த சிவப்பனுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை அன்கான்ஜுகேடட் பிலிரூபின் (Unconjugated Bilirubin) (எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின்) என்று அழைக்கிறார்கள்
இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள் (வாட்டர் இன்சால்யுபிள்) எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. (கொஞ்சம் வெளியேரும்) இதற்கு நமது உடலில் ஒரு அருமையான ஏற்பாடு உள்ளது. ஈரலில் (லிவர்) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (குலுக்குரோனிக் ஆசிட்) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது (கான்ஜுகேடட் பிலிரூபின்) (Conjugated Bilirubin) இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினனை சிறு நீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.
ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது. இதனால் தான் மலம் மஞ்சள் நிறமாக உள்ளது
இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்
-oOo-
வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால்
1. அதிக அளவு பிலிரூபின் உருவாகிறது.
2. இதில் ஒரு பகுதி இணைக்கப்பட்ட பிலிரூபினாகிறது
3. மீதி இணைக்கப்படாத பிலிரூபினாக இரத்தத்தில் உள்ளது.
4. இணைக்கப்படாத பிலிரூபின் அதிக அளவில் சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அதாவது நிறமல்லாமல். இதனால் இந்த வியாதியை நிறமல்லா சிறுநீர் மஞ்சள் காமாலை என்றும் அழைக்கலாம் (acholuric jaundice)
இந்த வியாதியை ப்ரீ ஹெபாடிக் ஜாண்டிஸ் (Pre hepatic Jaundice – அதாவது பிலிருபீன் வழக்கமாக செல்லும் பாதையில் ஈரலுக்கு முன்னர் கோளாறு உள்ளது) என்று அழைப்பார்கள். பொதுவாக இரத்த அணுக்கள் அதிகம் உடைபடும் வியாதிகளில் (ஹீமோலைடிக் டிஸாடர் - hemolytic disorders) இந்த வகை மஞ்சள் காமாலை வரும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க முதலில் இரத்த சிவப்பணுக்கள் உடைபடுவதை தடுக்க வேண்டும். கீழா நெல்லி உதவாது.
கீழா நெல்லி மட்டும் சாப்பிட்டாலோ, சூடு போட்டாலோ, இயற்கை வைத்தியம் என்றால் பெயரில் ஊரை ஏமாற்றும் மோசடி நபர்கள் கூறும் சிகிச்சைகளை எடுத்தாலோ மரணம் தான்
-oOo-
ஈரல் வேலை செய்யாவிட்டாலோ அல்லது வழகத்திற்கு குறைவாக வேலை செய்தாலோ
1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் இரத்ததில் தேங்குகிறது
2. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்படாத பிலிரூபின் வெளியேறுகிறது.
இந்த வகை வியாதிகளை ஹெபாட்டிக் ஜாண்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது பிரச்சனை ஈரலில் உள்ளது.
ஈரலில் என்ன பிரச்சனை என்றால்
1. வேதியல் பொருட்களால் இருக்கலாம்.
2. சில வகை மருந்து பொருட்களால் இருக்கலாம்.. முக்கியமாக – பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லி (அல்லது அறியாமல் சொல்லி) விற்கப்படும் / அளிக்கப்படும் சித்தா, ஆயுர்வேதா, யூனானி, ஹோமியோமதி மருந்துக்களில் பல ஈரலையும் சிறுநீரகத்தையும் நாசம் செய்ய வல்லவை. பக்க விளைவு இல்லாத மருந்து எதுவும் கிடையாது
3. ஆட்டோ இம்யூன் டிஸார்டர் – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது உடலுக்கு எதிராக செயல்படும் விநோத, வேதனை நிகழ்வு இது. அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி நோய்கிருமிகளை மட்டும் அழிக்காமல் உடலையும் அழித்து விடும். சில நேரங்களில் நோய்கிருமிகளுக்கு பதில் உடல் திசுக்களை மட்டும் அழித்துவிடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்துமாவுக்கும் இது தான் காரணம்.
4. கிருமிகளினால் இருக்கலாம்
கிருமிகள் என்றால்
1. பேக்டிரியா
2. வைரஸ்
3. பங்கஸ்
4. பூச்சிகள், புழுக்கள்
இதில் முக்கியமாக வைரஸ் என்று பார்த்தோம் என்றால் அதில்
1. பிற நோய்களை உருவாக்கும் (அதே நேரத்தில் ஈரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்) வைரஸ்கள்
2. முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்கள்
இந்த இரண்டாவது முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்களளில் 7 வகைகள் உள்ளன
1. ஹெபடைட்டிஸ் A
2. ஹெபடைட்டிஸ் B
3. ஹெபடைட்டிஸ் C
4. ஹெபடைட்டிஸ் D
5. ஹெபடைட்டிஸ் E
6. ஹெபடைட்டிஸ் F
7. ஹெபடைட்டிஸ் G
இது போன்ற ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன. எனவே இது தானாகவே சரியாகிவிடும். கொஞ்ச நாட்களுக்கு எண்ணை மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை சாப்பிட்டால் போதும்.
அது போல் சூடு போடுவதால் இது சரியாவதில்லை
கீழா நெல்லி என்பது இந்த நோய்க்கு (வைரஸ்) மருந்து அல்ல. அது ஈரல் விரைவில் குணமடைய வைப்பதாக நம்பம்படுகிறது
கீழா நெல்லி குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அவை உடலுக்கு (அதிக அளவில்) தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டுபிடித்து உள்ளார்கள். (மற்ற சித்த, ஆயூர்வேத மருந்துகள் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமலேயே பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லப்படுகிறது)
இதில் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமிகளினால் வரும் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தேவையில்லை
தானாக சரியாகிவிடும்
இந்த தானாக சரியாகும் மஞ்சள்காமாலைக்குத்தான் சிகிச்சை அளிப்பதாக கூறி ஊரை ஏமாற்றும் கும்பல் பணம் சம்பாதிக்கிறார்கள்
பிற வைரஸ்,
பேக்டிரியா
வைரஸ்
காளான் - பங்கஸ்
பூச்சிகள், புழுக்கள்
மூலம் வரும் மஞ்சள் காமாலைக்கு நவீன மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணம் தான்
-oOo-
ஈரலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் எதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என்ன நடக்கும்
1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் வழக்கமாக செயல்படும் ஈரலினால் இணைக்கப்பட்ட பிலிரூபினாக மாற்றப்படுகிறது
2. பித்த நீர் வழியாக வெளியேற முடியாத இணைக்கப்பட்ட பிலிரூபின் மீண்டும் இரத்ததில் சேறுகிறது
3. இரத்ததில் அளவிற்கு அதிகமான இணைக்கப்பட்ட பிலிரூபின் உள்ளது
4. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்பட்ட பிலிரூபின் வெளியேறுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
5. இரைப்பைக்கு பித்த நீர் வராததால், கொழுப்பு சத்து ஜீரனிக்கப்படுவதில்லை.
6. எனவே மலத்தில் கொழுப்பு சத்து வெளியெறுகிறது
7. மலம் வெள்ளை நிறமாக உள்ளது.
இது போன்ற நிலைமைகளை போஸ்ட் ஹெபாடிக் ஜான்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ஈரலிலிருந்து பிலிரூபின் வெளியேறியபின் பிரச்சனை. அதுவும் பெறும்பாலும் எதேனும் அடைப்பு.
இந்த அடைப்பு
ஈரலுக்கு உள்ளும் இருக்கலாம் – இண்ட்ரா ஹெபாடிக் Intrahepatic
ஈரலுக்கு வெளியிலும் இருக்கலாம் – எக்ஸ்ட்ரா ஹெபாடிக் Extrahepatic
அதே போல் இது (இந்த அடைப்பு )
பிறக்கும் போதே இருக்கலாம் – கன்ஜெனிடல் Congenital
பிறகு வந்திருக்கலாம் - அக்கொயர்ட் Acquired
இதில் 20 வயதிற்கு மேல் திடீரென்று ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்து மலம் வெள்ளை நிறமாக அதிக கொழுப்புடன் வருகிறது என்றால் அதற்கு காரணம் எதோ அடைப்பு.
அது பித்த கற்களாகவும் (பைல் ஸ்டோன் Bile Stone) இருக்கலாம்
அல்லது புற்று நோயாகவும் (கான்ஸர் Cancer) இருக்கலாம்
முக்கியமான விஷயம், இது போன்ற நோய்களினால் வரும் மஞ்சள் காமாலை கீழா நெல்லி சாப்பிட்டாலோ அல்லது என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகாது. இதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
அதுவும் புற்று நோய் என்றால் ஆரம்ப கட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைக்க முடியும்.
கல் அடைப்பு என்றால் அறுவை சிகிச்சை செய்த பிறகு பூரண குணமடையலாம்
-oOo-
சாராம்சம் 1 :
மஞ்சள் காமாலை ஒரு நோய் அல்ல. அது நோய் குறி
நோய் முதல் நாடி, எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்று கண்டறிய வேண்டியது அவசியம்
அப்படி பட்ட மூல காரணங்ளில் சில காரணங்களுக்கு சிகிச்சை தேவையில்லை, தானாக சரியாகிவிடும்
அப்படி பட்ட மூல காரணங்ளில் சில காரணங்களுக்கு சிகிச்சை அவசியம்
சாராம்சம் 2 :
மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது என்று நவீன விஞ்ஞான மருத்துவ முறைகள் மூலமே கண்டுபிடிக்க முடியும்
மூட நம்பிக்கை மருத்துவர்கள், ஹீலர்கள் என்று ஊரை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள், இயற்கை மருத்துவம் முகமூடி அணிந்து கொள்ளும் சமூக விரோதிகள் ஆகியோர்களால் மஞ்சள் காமாலை ஏற்படும் காரணங்களை கண்டுபிடிக்க முடியாது. ஹெபடைட்டிஸ் A, leptospirosis, gall stones, prehepatic jaundice என்று அனைத்து நோய்களுக்கும் இந்த சமூக விரோத மோசடி பேர்வழிகள் ஒரே (பலனளிக்காத) வைத்தியம் மட்டுமே கூறுவார்கள்.
சாராம்சம் 3 :
சிகிச்சை தேவையில்லை, தானாக சரியாகிவிடும் காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்றால் பிரச்சனையில்லை
சாராம்சம் 4 :
சிகிச்சை அவசியம் தேவைப்படும் காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்றால் கண்டிப்பாக நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
அல்லது
நோய் முற்றி மரணம் கூட ஏற்படலாம்
-oO-
நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் எளிதில் சரிபடுத்தக்கூடிய காரணங்களினால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோய்க்கு
முறையாக சிகிச்சை எடுக்காமல்
தவறான வழிகாட்டுதலின் பேரில் மோசடி நபர்களிடம் சிகிச்சை எடுத்து
சாதிக்க வேண்டிய வயதில் மரணமடையும் நபர்களை காப்பாற்ற
இது குறித்த சரியான தகவல்களை பரப்புவோம் . . .
மஞ்சள்காமாலை குறித்து தவறான தகவல்களை அளிக்கும் மஞ்சள் ஊடகங்களை புறக்கணிப்போம்

திங்கள், ஜூலை 04, 2016

இதுதான் உலகம்

சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.
அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.
’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.
ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .
”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,
“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.
சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.
அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின் றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்த வுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.
ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.
கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.
‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,
’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.
காலை விட்டால் சிறுவன் ஓடிவிடு வான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.
உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன் னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.
முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.
சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய் விடுகிறது, வலையில் சிக்கியிருக் கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.
கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.
தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.
சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்று வதற்குள் முயலை நாய் கொன்று விடுகிறது.
உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.
உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.
இதுதான் உலகமா?
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.
முன்னுக்குப்பின் முரணனான தாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.
அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.
"வாழ்க்கையை புரிந்து கொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை".... ப.பி..

புதன், ஜூன் 22, 2016

Seven Ancient Wonders of the World

The Seven Wonders of the Ancient World were:
the Great Pyramid at Giza, Egypt.
the Hanging Gardens of Babylon.
the Statue of Zeus at Olympia, Greece.
the Temple of Artemis at Ephesus.
the Mausoleum at Halicarnassus.
the Colossus of Rhodes.
the Lighthouse at Alexandria, Egypt.

The Seven Wonders of the Ancient World


Since ancient times, people have put together many “seven wonders” lists. Examples include the Seven Wonders of the Natural World, the Seven Wonders of the Modern World and the Seven Natural Wonders of the U.S. The content of these lists tends to vary, and none is definitive. The original list of seven wonders is the Seven Wonders of the Ancient World, which is made up of a selection of ancient architectural and sculptural accomplishments. The seven wonders that are most widely agreed upon as being in the original list are outlined below.

The Pyramids of Egypt

A group of three pyramids, Khufu, Khafra, and Menkaura located at Giza, Egypt, outside modern Cairo, is often called the first wonder of the world. The largest pyramid, built by Khufu (Cheops), a king of the fourth dynasty, had an original estimated height of 482 feet (now approximately 450 feet). The base has sides 755 feet long. It contains 2,300,000 blocks. The average weight of each block is 2.5 tons. Estimated date of construction is 2680 B.C. Of all the Ancient Wonders, the pyramids is the only one still standing.

Hanging Gardens of Babylon

Often listed as the second wonder, these gardens, which were located south of Baghdad, Iraq, were supposedly built by Nebuchadnezzar around 600 B.C. to please his queen, Amuhia. They are also associated with the mythical Assyrian queen, Semiramis. Archeologists think that the gardens were laid out atop a vaulted building, with provisions for raising water. The terraces were said to rise from 75 to 300 feet.

Statue of Zeus (Jupiter) at Olympia

Phidias (fifth century B.C.) built this 40-foot high statue in gold and ivory. All trace of it is lost, except for reproductions on coins. It was located in Olympia, Greece.

Temple of Artemis (Diana) at Ephesus

The temple was a beautiful marble structure, begun about 350 B.C., in honor of the goddess Artemis. The temple, with Ionic columns 60 feet high, was destroyed by invading Goths in A.D.262. It was located in Ephesus, Turkey.

Mausoleum at Halicarnassus

This famous monument was erected in Bodium, Turkey, by Queen Artemisia in memory of her husband, King Mausolus of Caria in Asia Minor, who died in 353 B.C. Some remains of the structure are in the British Museum. This shrine is the source of the modern word “mausoleum,” which is a large above-ground tomb.

Colossus at Rhodes

This bronze statue of Helios (Apollo), about 105 feet high, was the work of the sculptor Chares. He worked on the statue for 12 years, finishing it in 280 B.C. It was destroyed during an earthquake in 224 B.C. Rhodes is a Greek island in the Aegean Sea.

Pharos of Alexandria

The seventh wonder was the Pharos (lighthouse) of Alexandria. Sostratus of Cnidus built the Pharos during the third century B.C. on the island of Pharos off the coast of Egypt. It was destroyed by an earthquake in the thirteenth century.

                  

செவ்வாய், ஜூன் 14, 2016

சிற்றின்பம்….!! பேரின்பம்…!!!!


படைப்பினால் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம்.
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.
படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.
புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.
மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.
மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
மரணத்தையும் வெல்வது பேரின்பம்.
மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
மனதைக் கடந்தால் பேரின்பம்.
வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.
பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
மொத்தமாய் கண்டால் பேரின்பம்.
அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
அகங்காரம் துறந்தால் பேரின்பம்.
தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.
ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.
ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.
இறைவனால் தரப்படுவது பேரின்பம்.
உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
இறைவனைப் பற்றினால் பேரின்பம்.
பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.
இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
இன்பமான இன்பமே பேரின்பம்.
அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
ஞானம் விரும்புவது பேரின்பம்.
பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
கொடுத்து மகிழ்வது பேரின்பம்.
சக்தியை இழப்பது சிற்றின்பம்.
சக்தியாய் மாறுவது பேரின்பம்.
பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
பற்றற்று இருப்பது பேரின்பம்.
மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
மாறாதது நிலைத்தது பேரின்பம்.
நிலையற்றது சிற்றின்பம்.
நிரந்தரமானது பேரின்பம். 


சே குவாரா

சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்.
பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் 'சே' & காஸ்ட்ரோ சந்திப்பு!
ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன. புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.
பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர். புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை.
அப்போது 'சே'வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் 'சே'வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந் திராத ஒன்று. இதனால்தான் 'சே' மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.
'கால்கள்தான் என் உலகம்' என 'சே' ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். 'என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது! அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்' எனும் பேருண்மையை அர்த்தப்படுத்தும் வாசகம் இது. இதனால்தான் காஸ்ட்ரோவிடம், 'கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்து, வெவ் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்' என அழுத்தமாகக் கூறியிருந்தார் 'சே'. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26&ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.
1957, ஜனவரி 17&ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற 'சே', தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். அவரது திறமை கண்டு வியந்த சக கியூபா வீரர் கள் அவரை பிரியத்துடன் 'சே' என அழைத்தனர். கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார் 'சே'.
''சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்'' போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு மில்லியன் மெகா வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் 'சே'வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. பின் தொடர்ந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிலைகளில் புரட்சிப்படை, பாடிஸ்டா அரசை முழுவதுமாக விரட்டியடித்தது.
1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற் றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த் தியது. 'டைம்' இதழ் 'சே' அட்டைப்படத்துடன் 'புரட்சி யின் மூளை'யென கட்டுரை எழுதியது.
1959, பிப்ரவரி 16&ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன், விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் 'சே'. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் 'சே' என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் தொழிற்துறை அமைச் சராகவும் 'சே' பதவி வகித்தார். இருந்தாலும் 'சே' தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். 'சே' மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என 'சே' திடமாக நம்பினார்.
கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ''ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்'' எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ''அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்'' என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் 'சே'.
சே குவேராவுக்கு முடிவுரை எழுதக் களத்தில் இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ!
சி.ஐ.ஏ...
உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார், எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைபடத்தில் இந்த ஓநாயின் காலடி படாத இடமே இல்லை.
'சே'வின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்புப் பேச்சும் சி.ஐ.ஏ&வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ. தன் முழு எரிச்சலையும் 'சே'வின் பக்கம் திருப்பியது. காஸ்ட்ரோவைக் காட்டிலும் 'சே'தான் மிகவும் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.
விழும் இடமெல்லாம் விதைபோல விழுவதும், எழும் இடமெல்லாம் மலை போல எழுவதுமாக இருந்த 'சே', சதித் திட்டம் குறித்து அறிந்தும் புன்னகைத்தார். தொடர்ந்து சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கப்படும் மூன்றாம் உலகக் குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளா- தாரரீதியாகப் பாதுகாப்-பளிக்க வேண்டி-யது அதன் தார்மிகக் கடமை என முழங்கினார். தொடர்ந்து தான்சானியா, கானா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதி-காரத்தாலும் ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
மூன்று மாத & கியூபா அரசால் அங்கீ-கரிக்கப்படாத &பயணத்துக்குப் பிறகு, 'சே' 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு 'சே' நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு 'சே'வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.
அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, 'சே'வை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது 'சே'வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் 'சே' கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.
'சே எங்கே?' பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. 'சே'வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
சே காஸ்ட்ரோ இருவருக்கு-மிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படை-யில் 'சே' ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கிற செயல் புயல். காஸ்ட்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பது 'சே'வின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு. இருவருக்கு மிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை!
உண்மையில் 'சே' அப்போது காஸ்ட்ரோவுக்கும், அவரது தாய்க்-கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி-விட்டு தனது அடுத்த புரட்சிக்காக காங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ட்ரோ எவ்வளவோ முயற்சித்தும் 'சே'வை நிறுத்த முடியவில்லை. 'மக்களுக்கான பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது' என 'சே' காஸ்ட்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
'சே எங்கே?' எனக் கேட்டவை அழித்தொழிக்கத் தேடி வரும் சி.ஐ.ஏ&வுக்கு துப்பு கிடைத்து விடக்கூடும் என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு 'சே' சென்று விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை நம்பி, வியட்நாம் காடுகளில் 'சே'வை சி.ஐ.ஏ அலைந்து ஏமாற்றமும் . அடைந்தது. அ.ந்தக் கடுப்பில், 'சே'வை காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு தங்களிடம் ஆதா ரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத் தொடங்கியது. இது காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்க, வேறு வழி இல்லாமல் அக்டோபர் 3, 1965&ல், பொதுமக்கள் முன்னிலையில் 'சே' தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் பகிரங்கமாக வெளியிட்டார் காஸ்ட்ரோ. கடிதத்தில் 'சே' கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும், காங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டி ருந்தார்.
'சே', காங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீரர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் காங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல், அந்த புரட்சி 'சே'வுக்கு வெற்றி தேடித் தரவில்லை. காங்கோ நாட்குறிப்புகள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.
அமெரிக்க சி.ஐ.ஏ. கழுகுகள் அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள் புகுந்தபோது, 'சே' தன் பட்டாளத்துடன் செக்கோஸ் லோவியாவுக்கு இடம்பெயர்ந் திருந்தார்.
'சே'வுக்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலிவிய மாவோயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப் பின் பேரில், தன் அடுத்த இலக்கான பொலிவியாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப் படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. ஆனால், அங்கேயும் அவருக்கு காங்கோவைப் போல தோல்வியே காத்திருந்தது.
தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து 'சே'வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் 'சே' காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில்வேட்டையாடத் தொடங்கியது.
1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே' கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு 'சே'வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ''நான்தான் 'சே'. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.
மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் 'சே' கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.
இரவு 7.00... 'சே பிடிபட்டார்' என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், 'சே' உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?'' என்று 'சே' கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?'' என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்ட கொரில்லா வீரர்களுடன் அருகில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் அடைத்தனர்.
நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், 'சே'வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ''முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!'' என்பார் 'சே'. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.
தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு 'சே' கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ''கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!
மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.
'சே' இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.
அக்டோபர் 18.... கியூபா... ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் 'சே'வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ''வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட 'சே' நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்'' என வேண்டுகோள் விடுக்கிறார்.
இறந்தபோது 'சே'வுக்கு வயது 40. உலகம் முழுக்க 'சே'வின் புகழ் இன்னும் இன்னும் பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் 'சே' குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்-டோவியா பாஸ், ஹ¨லியா கொத்சார் போன்றவர்கள் 'சே' குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், 'பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே!' என மகுடம் சூட்டினார்.
நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவேராயிசம் எனும் கொள்கைகொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தின்போது ஏசுவைப் போன்ற 'சே'வின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்தி ருந்தனர்.
கியூபா அரசாங்கம் 'சே'வின் நினைவைத் தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளா கவும், பல்வேறு உருவ வேலைப்பாடு களாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத் தியது. சான்டா கிளாரா எனும் நகரில் 'சே'வின் மியூஸியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூஸியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவுக்கு வந்து செல்கின்றனர்.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?
''ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் 'சே'வைப் போல இருப்போம்!''