ஞாயிறு, மார்ச் 08, 2015

சில பழமொழிகள்




ஷ்ஷ்ஷ்..... பேச்சு பேச்சோட இருக்கணும் ஆமா. smile emoticon
• அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்து கொண்டு ஆம்படையானை அடித்தாளாம்.
• அடங்காத பெண்சாதியாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
• அரிசி பகையும் ஆம்புடையான் பகையும் உண்டா?
• அறக்காத்தான் பெண்டிழந்தான், ஆறுகாதவழி சுமந்து அழுதான்.
• ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.
• ஆபத்துக்கு உதவாத பெண்சாதி அழகுக்கா வைத்திருக்கிறது?
• இளையாள் இலைதின்னி, மூத்தாள் காய் அரிவாள்.
• இளையாளே வாடி மலையாளம் போவோம், மூத்தாளே வாடி முட்டிகிட்டு சாவோம்.
• கல்லாகிலும் கணவன், புல்லாகிலும் புருஷன்
• கல்லைப்போல கணவனிருக்க நெல் சோற்றுக்கு அழுவானேன்?
• குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்சாதி குணம் அறிவாள்.
• கொண்டவன் அடிக்க, கொழுந்தனார்மேல் விழுந்தாளாம்.
• கொண்ட பெண்சாதியே கூர் அரிவாளாயிருந்தாள்.
• கோழி தட்டிக் கூவுமா?
• துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
• பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு.
• பெண்சாதி கால் விலங்கு, பிள்ளை சுள்ளாணி.
• பெண்சாதி கொண்டதும், திண்டாட்டம் பட்டதும் போதும்.
• பைசாவுக்குப் பத்து பெண், கொசுறு குத்து.
• மாலை இட்ட பெண்சாதி எமன்போல் வந்தாள்.
• வீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப் பெண்சாதி கரும்பு.
• அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
• ஆறாம்பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆறான குடித்தனம் நீறாய் விடும்.
• குமரியாயிருக்கையில் கொண்டாட்டம், கிழவியாயிருக்கையில் திண்டாட்டம்.
• சக்கிலிப்பெண்ணும் சமைந்தால் அழகுதான்.
• அடக்கத்துப் பெண்ணுக்கு அழகு ஏன்?
• ஐந்து வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயதுப்பெண் கால் மடக்க வேண்டும்.
• பெண்ணுக்குக் குணம்தான் சீதனம்
• பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரை வரைதான்.
• ராஜா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்தான்.
• இடுப்பு சுருங்குதல் பெண்டுக்கு அழகு.
• கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி, வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி
• சேலை மேல் சேலை கட்டும் தேவரம்பை ஆனாலும், ஓலைமேலே எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.
• பூவுள்ள மங்கையாம், பொன் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம்.
• பெண்ணுக்குப் போய், பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
• பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார், சுவருக்கு மண் இட்டுப்பார்.
• பெண்ணின் கோணல், பொன்னிலே நிமிரும்.
• ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யப்படாது.
• ஆணை அடித்து வளர், பெண்ணைப் போற்றி வளர்.
• பெண் என்றால் பேயும் இரங்கும்
• மண்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.
• எண்ணறக்கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி பின்புத்தியே.
• சொல்லாத்தை மனையாளுக்குச் சொன்னவன் பட்ட பாடுபோல.
• அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி, ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி.
• ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் எடுகுமரி.
• ஏர் பிடித்தவன் என்ன செய்வான், பானை பிடித்தவள் பாக்கியம்.
• பெண்டுகள் சோற்றுக்குத் தெண்டமில்லை.
• மனைக்கொடியில்லாத மனை பாழ்.
• மனைவி இல்லாத புருஷன் அரை மனுஷன்.
• இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள், எமதருமனை கையாலே மறைப்பாள்.
• எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலாட்டுவாள்.
• சித்திரத்தை நோண்டி அப்புறத்தே வைப்பாள்.
• விலைமோரில் வெண்ணெய் எடுத்து தலைமகனுக்கு கலியாணம் பண்ணுவாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக