தெரிந்து கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்து கொள்வோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 12, 2016

அமிர்தகடேஸ்வரர் திருகோயில்

மார்கண்டேயர் வழி பட்டு என்றும் பதினாறு வயதினராக இருந்ததால் அமிர்தகடேஸ்வரர் திருகோயிலுக்கு ஆயுள் விருத்தி வேண்டுவோர் செல்வதுண்டு .
நளன் வழிபட்டு சனி தோஷம் நீங்கியதால் ஏழரை சனியால் பீடிக்க பட்டவர்கள் திருநள்ளாறு போவதுண்டு
அது போல் பதவி உயர்வு, தொழில் துறையில் சிறந்து விளங்க விரும்புவர்கள் சில குறிப்பிட்ட கோயில்களுக்கு போக வேண்டும். அது என்ன கோயில் தெரியுமா?
இந்திரன் வழிபட்ட கோயில்களுக்கு சென்றால் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சி நிச்சயம் பெறுவார்.
பதவி உயர்வு, தொழில் துறையில் சிறந்து விளங்க விரும்புவர்கள் சில குறிப்பிட்ட கோயில்களுக்கு போக வேண்டும். அது என்ன கோயில் தெரியுமா?
அத்திமுகம் ஐயரவதேஷ்வர் சிவ பெருமான்கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து 23கிமீ தொலைவில் உள்ளது அத்திமுகம் கிராமம் . 1800 வருடம் பழமையான திருகோயிலில் இரட்டை சந்நிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் அருள் பாலித்து வருகிறார்.
சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் காட்சி தருகிறார் , அதே கருவறையில் அம்மையும் எழுந்தருளி இருப்பது மிக விசேஷம்.
கோயிலின் மட்டம் ஊரில் இருந்து 15 அடி கிழே உள்ளது.திருசெந்தூர் முருகன் கோயில் கடல் மட்டத்தை விட கீழே இருக்கும்.திருசெந்தூர் முருகனை இறங்கி போய் தரிசனம் செய்தல் தொழில் துறையில், வாழ்க்கையில் நம்மை மேலே ஏற்றி விடுவார் என்பது நம்பிக்கை.
அது போல இங்கே கீழே இறங்கி போய் ஐராவத ஈஷ்வரரை தரிசனம் செய்து மன குறைகளை சொல்லி அழுதால் அவர் வேண்டியவர்களுக்கு வேண்டியதை கொடுத்து வாழ்கையில் ஏற்றம் கொடுத்த நிகழ்வுகள் பல பல.
இந்திரன் பதவி ஆசை பிடித்தவர் தனது பதவியை காப்பற்றிக்கொள்ளவே பல சிக்கல்களில் மாட்டி கொள்வர். அவர் செய்த பல வழிபாடுகள் தனது பதவியை காப்பாற்ற என்பதால் இந்திரன் வழிபட்ட லிங்கங்கள் யாவும் தொழில் விருத்திக்கு பலன் கொடுக்கும்.
திருவண்ணாமலை கிரி வல பாதையில் முதல் லிங்கமே இந்திர லிங்கம் தான்.
விஷயம் தெரிந்தவர்கள் தொழில் வளர்சிக்காக இந்திர லிங்கத்தை சிறப்பாக வழிபாட்டு செல்வர்.
இந்த அத்திமுகம் கோயிலில் இருப்பதும் இந்திரன் வழிபட்ட சுயம்பு லிங்கம் தான்.ஆகையால் தொழில் முனைவோர், வேலை வேண்டுவோர் , பதவி உயர்வுக்காக காத்து கிடப்போர் இங்கு வந்து வழிபாடு செய்தால் நல்ல பலனை பெறலாம்.
ஹோசூரை பூர்விகமாக கொண்ட பலருக்கே இந்த கோயில் இருப்பது தெரியாது.
ஒவ்வொரு கோயிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பிரபலமாகும் அங்கே இருக்கும் மூலவர் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மிகுந்த ஆற்றலோடு இருப்பார்.
இந்த ஐயரவதேஷ்வர் கோயில் தற்போது வெளி உலகுக்கு தெரிய வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளது.
இந்த சமயத்தில் இங்கு சென்று வழிபடும் வாய்ப்பு கிடைக்க வேண்டியவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
இந்த செய்தியை நீங்கள் தற்போது படித்து கொண்டு இருந்தால் அப்படி பட்ட வாய்ப்பு கிடைக்க பெற்றவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இத்தலத்தின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
திரேதா யுகத்தில் விருதிரசுரனுடனான போரில் இந்திரன் அரக்கனை கொன்று அழிகின்றான். அரக்கனை கொன்றது முனிவர்களையும் தேவர்களையும் காக்க தான் என்றாலும் ஒரு உயிரை கொன்ற பாவம் ப்ரமஹத்தியாய் இந்திரனையும் போரில் அவனுக்கு உதவி புரிந்த அவனது வாகனம் ஐராவதத்தையும் பிடிக்கின்றது .
பிரமஹத்தி தோஷத்தால் தன் ஆற்றலையும் பொலிவையும் இழந்த இந்திரன் மீண்டும் இந்திரா லோகம் செல்ல முடியாமல் பூவுலகிலேயே சிக்கி தவிகிறார்கள்.
பல தலங்களுக்கு சென்று பிரமஹத்தி தோஷம் தொலைய பூஜை செய்கிறார்கள். அதன் பலனாக வானத்தில் ஒரு அசரீரி கேட்கிறது.
அகஸ்திய நதிக்கரை ஓரம் இருக்கும் சுயம்பு லிங்கத்தை கண்டு பிடித்து 48 நாட்கள் பூசை செய்தால் அவ்விருவரையும் விட்டு பிரமஹத்தி தோஷம் நீங்கும் என்று அவ்வசரீரி கூறுகின்றது.
உடனே இந்திரனும் அவனது யானையும் அகஸ்திய நதியை தேடி செல்கின்றனர். அங்கே சென்று நதி கரை ஓரத்தில் சுயம்பு லிங்கத்தை தேடி அலைகின்றனர்.
பளிங்கு போன்ற நதி கரை ஓரத்தில் சுற்றி வில்வ மரங்கள் சூழ அற்புதமாக வீற்றிருந்தார் சுயம்பு லிங்க பெருமான்.
மிகுந்த மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் ஐராவதமும் சுயம்பு லிங்கத்தை சுற்றி பீடம் அமைத்து பூசை ஏற்பாடுகளை செய்தனர்.
மறு நாள் காலையில் நியமப்படி பூசைகளை செய்தனர். இப்படி விடாமல் 48 நாட்கள் பக்தி சிரத்தையோடு பூசை செய்தனர்.
அவர்களின் பூசையில் மனம் குளிர்ந்த சிவ பெருமான் 48ம் நாள் அவர்களுக்கு காட்சி கொடுத்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி இந்திர லோகத்தை மீண்டும் அளித்தார்.
ஐராவதத்தின் பக்தியை மெச்சி சுயம்பு லிங்கத்தில் இறைவனே ஐராவதத்தின் உருவத்தையும் பொரித்து அதற்கு இரவதேஷ்வர் என்று பெயரும் தந்தருளினார்.
சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் நாகேஸ்வரர் சிலையில் பாம்பு உருவம் இருக்கும். அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் யானை உருவத்தைக் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.
வெளிபிரகாரத்தில் அட்சரமாலையுடன் கணபதி வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.
யானை- ஹஸ்தி முகம் பொறிக்கப்பட்டதால் அந்த கிராமம் அன்று முதல் ஹஸ்தி முகம் என்று அழைக்க படுகிறது.
இத்தலத்தில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. 1800 வருட பழமையான ஸ்தல விருட்சம் வில்வ மரம் ஒன்று உள்ளது.
மிக உயரமான வில்வ மரமான அவ்விருட்சம் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
ஊருக்கு கிழே 15அடி ஆழத்தில் தன இந்த கோயில் உள்ளது
.
அற்புதமான பஞ்ச லிங்க சந்நிதி உள்ளது.
நீண்ட வரிசையில் ஒவ்வொரு லிங்கமும் ஒவ்வொரு உருவத்தில்,அளவில் தனி தனி நந்திகளோடு வீற்றிருப்பது அற்புதமான காட்சி
.
ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால் காமாட்சி அம்மனும் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர்.இங்குள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை ஒழித்து ஞானத்தை வழங்குகிறார்.எனவே தான் இவர் “சம்கார தெட்சிணாமூர்த்தி”எனப்படுகிறார்.
இங்கு இரண்டு மூலவர்கள் உள்ளனர். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும்,அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள்.
தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது.ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகிப் பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை அறியலாம
தை மாதத்தில் சூரியனின் கதிர்கள் சுயம்பு லிங்கத்தில் படுவதால் நந்தியம்பெருமான் இங்கே சட்ட்று விலகி இருக்கிறார்.
நந்தி விலகிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
மற்றொரு அற்புதம் இங்கே உள்ள நவக்ரஹ சந்நிதி . இங்கே உ ள்ள நவக்ரகங்கள் எங்கும் காண முடியாத அதிசயமாக அமர்ந்த நிலையில் அமைதியாக உள்ளன. ஆகையால் இது நவக்ரஹ தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகின்றது.
கோயிலுக்கு செல்ல உகந்த நேரம் பிரதோஷ காலமாகும்.
இங்கு பிரதோஷ வழிபாடு மிக சிறப்பாக நடை பெறுகிறது. தீட்சை பெற்ற சிவனடியர்களால் தேவார திருவாசக பதிகங்கள் ஓதப்படுகின்றது
மேலும் இங்கு வரும் பக்தர்களும் இப்பதிகங்களை ஓத புத்தகங்களும் தர படுகின்றது. ஆகையால் பிரதோஷத்திற்கு வரும் பக்தர்கள் இங்கு தங்கள் மனமார ,இறைவன் செவி குளிர, தத்தம் வாயார பதிகங்களை பாடி தமது குறைகளை களைந்து கொள்ளலாம்.
bus route from hosur to Athimugam: 15,24,33,47,48.
சூளகிரியில் இருந்தும் அத்திமுகதிற்கு பேருந்துகள் உண்டு
.
இத்தகைய சிறப்பு மிக்க ஸ்தலத்தில் இப்போது புனரமைப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றன.
அன்பர்கள் நேரில் வந்து அருள் பெற்று ஆலய திருப்பணியில் ஈடுபட்டு சிவ புண்ணியம் தேடுமாறு கேட்டு கொள்ள படுகின்றது
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து,புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


தகவல் உதவி: தேவகி மோகன்

புதன், ஜூன் 22, 2016

Seven Ancient Wonders of the World

The Seven Wonders of the Ancient World were:
the Great Pyramid at Giza, Egypt.
the Hanging Gardens of Babylon.
the Statue of Zeus at Olympia, Greece.
the Temple of Artemis at Ephesus.
the Mausoleum at Halicarnassus.
the Colossus of Rhodes.
the Lighthouse at Alexandria, Egypt.

The Seven Wonders of the Ancient World


Since ancient times, people have put together many “seven wonders” lists. Examples include the Seven Wonders of the Natural World, the Seven Wonders of the Modern World and the Seven Natural Wonders of the U.S. The content of these lists tends to vary, and none is definitive. The original list of seven wonders is the Seven Wonders of the Ancient World, which is made up of a selection of ancient architectural and sculptural accomplishments. The seven wonders that are most widely agreed upon as being in the original list are outlined below.

The Pyramids of Egypt

A group of three pyramids, Khufu, Khafra, and Menkaura located at Giza, Egypt, outside modern Cairo, is often called the first wonder of the world. The largest pyramid, built by Khufu (Cheops), a king of the fourth dynasty, had an original estimated height of 482 feet (now approximately 450 feet). The base has sides 755 feet long. It contains 2,300,000 blocks. The average weight of each block is 2.5 tons. Estimated date of construction is 2680 B.C. Of all the Ancient Wonders, the pyramids is the only one still standing.

Hanging Gardens of Babylon

Often listed as the second wonder, these gardens, which were located south of Baghdad, Iraq, were supposedly built by Nebuchadnezzar around 600 B.C. to please his queen, Amuhia. They are also associated with the mythical Assyrian queen, Semiramis. Archeologists think that the gardens were laid out atop a vaulted building, with provisions for raising water. The terraces were said to rise from 75 to 300 feet.

Statue of Zeus (Jupiter) at Olympia

Phidias (fifth century B.C.) built this 40-foot high statue in gold and ivory. All trace of it is lost, except for reproductions on coins. It was located in Olympia, Greece.

Temple of Artemis (Diana) at Ephesus

The temple was a beautiful marble structure, begun about 350 B.C., in honor of the goddess Artemis. The temple, with Ionic columns 60 feet high, was destroyed by invading Goths in A.D.262. It was located in Ephesus, Turkey.

Mausoleum at Halicarnassus

This famous monument was erected in Bodium, Turkey, by Queen Artemisia in memory of her husband, King Mausolus of Caria in Asia Minor, who died in 353 B.C. Some remains of the structure are in the British Museum. This shrine is the source of the modern word “mausoleum,” which is a large above-ground tomb.

Colossus at Rhodes

This bronze statue of Helios (Apollo), about 105 feet high, was the work of the sculptor Chares. He worked on the statue for 12 years, finishing it in 280 B.C. It was destroyed during an earthquake in 224 B.C. Rhodes is a Greek island in the Aegean Sea.

Pharos of Alexandria

The seventh wonder was the Pharos (lighthouse) of Alexandria. Sostratus of Cnidus built the Pharos during the third century B.C. on the island of Pharos off the coast of Egypt. It was destroyed by an earthquake in the thirteenth century.













                  

செவ்வாய், ஜூன் 14, 2016

சிற்றின்பம்….!! பேரின்பம்…!!!!


படைப்பினால் ஈர்க்கப்பட்டால் சிற்றின்பம்.
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.
படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.
புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.
மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.
மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
மரணத்தையும் வெல்வது பேரின்பம்.
மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
மனதைக் கடந்தால் பேரின்பம்.
வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.
பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
மொத்தமாய் கண்டால் பேரின்பம்.
அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
அகங்காரம் துறந்தால் பேரின்பம்.
தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.
ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.
ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.
ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.
இறைவனால் தரப்படுவது பேரின்பம்.
உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
இறைவனைப் பற்றினால் பேரின்பம்.
பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.
இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
இன்பமான இன்பமே பேரின்பம்.
அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
ஞானம் விரும்புவது பேரின்பம்.
பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
கொடுத்து மகிழ்வது பேரின்பம்.
சக்தியை இழப்பது சிற்றின்பம்.
சக்தியாய் மாறுவது பேரின்பம்.
பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
பற்றற்று இருப்பது பேரின்பம்.
மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
மாறாதது நிலைத்தது பேரின்பம்.
நிலையற்றது சிற்றின்பம்.
நிரந்தரமானது பேரின்பம். 


சே குவாரா

சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்.
பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் 'சே' & காஸ்ட்ரோ சந்திப்பு!
ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன. புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.
பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர். புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை.
அப்போது 'சே'வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் 'சே'வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந் திராத ஒன்று. இதனால்தான் 'சே' மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.
'கால்கள்தான் என் உலகம்' என 'சே' ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். 'என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது! அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்' எனும் பேருண்மையை அர்த்தப்படுத்தும் வாசகம் இது. இதனால்தான் காஸ்ட்ரோவிடம், 'கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்து, வெவ் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்' என அழுத்தமாகக் கூறியிருந்தார் 'சே'. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26&ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது.
1957, ஜனவரி 17&ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற 'சே', தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். அவரது திறமை கண்டு வியந்த சக கியூபா வீரர் கள் அவரை பிரியத்துடன் 'சே' என அழைத்தனர். கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார் 'சே'.
''சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்'' போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு மில்லியன் மெகா வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் 'சே'வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. பின் தொடர்ந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிலைகளில் புரட்சிப்படை, பாடிஸ்டா அரசை முழுவதுமாக விரட்டியடித்தது.
1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற் றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த் தியது. 'டைம்' இதழ் 'சே' அட்டைப்படத்துடன் 'புரட்சி யின் மூளை'யென கட்டுரை எழுதியது.
1959, பிப்ரவரி 16&ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன், விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் 'சே'. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் 'சே' என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் தொழிற்துறை அமைச் சராகவும் 'சே' பதவி வகித்தார். இருந்தாலும் 'சே' தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். 'சே' மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என 'சே' திடமாக நம்பினார்.
கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ''ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்'' எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ''அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்'' என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் 'சே'.
சே குவேராவுக்கு முடிவுரை எழுதக் களத்தில் இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ!
சி.ஐ.ஏ...
உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார், எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைபடத்தில் இந்த ஓநாயின் காலடி படாத இடமே இல்லை.
'சே'வின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்புப் பேச்சும் சி.ஐ.ஏ&வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ. தன் முழு எரிச்சலையும் 'சே'வின் பக்கம் திருப்பியது. காஸ்ட்ரோவைக் காட்டிலும் 'சே'தான் மிகவும் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.
விழும் இடமெல்லாம் விதைபோல விழுவதும், எழும் இடமெல்லாம் மலை போல எழுவதுமாக இருந்த 'சே', சதித் திட்டம் குறித்து அறிந்தும் புன்னகைத்தார். தொடர்ந்து சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கப்படும் மூன்றாம் உலகக் குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளா- தாரரீதியாகப் பாதுகாப்-பளிக்க வேண்டி-யது அதன் தார்மிகக் கடமை என முழங்கினார். தொடர்ந்து தான்சானியா, கானா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதி-காரத்தாலும் ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
மூன்று மாத & கியூபா அரசால் அங்கீ-கரிக்கப்படாத &பயணத்துக்குப் பிறகு, 'சே' 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு 'சே' நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு 'சே'வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.
அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, 'சே'வை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது 'சே'வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் 'சே' கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.
'சே எங்கே?' பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. 'சே'வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
சே காஸ்ட்ரோ இருவருக்கு-மிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படை-யில் 'சே' ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கிற செயல் புயல். காஸ்ட்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பது 'சே'வின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு. இருவருக்கு மிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை!
உண்மையில் 'சே' அப்போது காஸ்ட்ரோவுக்கும், அவரது தாய்க்-கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி-விட்டு தனது அடுத்த புரட்சிக்காக காங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ட்ரோ எவ்வளவோ முயற்சித்தும் 'சே'வை நிறுத்த முடியவில்லை. 'மக்களுக்கான பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது' என 'சே' காஸ்ட்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
'சே எங்கே?' எனக் கேட்டவை அழித்தொழிக்கத் தேடி வரும் சி.ஐ.ஏ&வுக்கு துப்பு கிடைத்து விடக்கூடும் என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு 'சே' சென்று விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை நம்பி, வியட்நாம் காடுகளில் 'சே'வை சி.ஐ.ஏ அலைந்து ஏமாற்றமும் . அடைந்தது. அ.ந்தக் கடுப்பில், 'சே'வை காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு தங்களிடம் ஆதா ரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத் தொடங்கியது. இது காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்க, வேறு வழி இல்லாமல் அக்டோபர் 3, 1965&ல், பொதுமக்கள் முன்னிலையில் 'சே' தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் பகிரங்கமாக வெளியிட்டார் காஸ்ட்ரோ. கடிதத்தில் 'சே' கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும், காங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டி ருந்தார்.
'சே', காங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீரர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் காங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல், அந்த புரட்சி 'சே'வுக்கு வெற்றி தேடித் தரவில்லை. காங்கோ நாட்குறிப்புகள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.
அமெரிக்க சி.ஐ.ஏ. கழுகுகள் அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள் புகுந்தபோது, 'சே' தன் பட்டாளத்துடன் செக்கோஸ் லோவியாவுக்கு இடம்பெயர்ந் திருந்தார்.
'சே'வுக்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலிவிய மாவோயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப் பின் பேரில், தன் அடுத்த இலக்கான பொலிவியாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப் படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. ஆனால், அங்கேயும் அவருக்கு காங்கோவைப் போல தோல்வியே காத்திருந்தது.
தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து 'சே'வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் 'சே' காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில்வேட்டையாடத் தொடங்கியது.
1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே' கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு 'சே'வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ''நான்தான் 'சே'. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.
மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் 'சே' கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.
இரவு 7.00... 'சே பிடிபட்டார்' என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், 'சே' உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?'' என்று 'சே' கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?'' என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்ட கொரில்லா வீரர்களுடன் அருகில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் அடைத்தனர்.
நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், 'சே'வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ''முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!'' என்பார் 'சே'. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.
தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு 'சே' கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ''கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!
மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.
'சே' இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.
அக்டோபர் 18.... கியூபா... ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் 'சே'வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ''வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட 'சே' நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்'' என வேண்டுகோள் விடுக்கிறார்.
இறந்தபோது 'சே'வுக்கு வயது 40. உலகம் முழுக்க 'சே'வின் புகழ் இன்னும் இன்னும் பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் 'சே' குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்-டோவியா பாஸ், ஹ¨லியா கொத்சார் போன்றவர்கள் 'சே' குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், 'பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே!' என மகுடம் சூட்டினார்.
நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவேராயிசம் எனும் கொள்கைகொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தின்போது ஏசுவைப் போன்ற 'சே'வின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்தி ருந்தனர்.
கியூபா அரசாங்கம் 'சே'வின் நினைவைத் தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளா கவும், பல்வேறு உருவ வேலைப்பாடு களாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத் தியது. சான்டா கிளாரா எனும் நகரில் 'சே'வின் மியூஸியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூஸியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவுக்கு வந்து செல்கின்றனர்.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?
''ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் 'சே'வைப் போல இருப்போம்!''

வெள்ளி, ஏப்ரல் 08, 2016

காவல்துறை - முத்திரை : தெரிந்ததும் - தெரியாதாதும் !

போலீஸ் முத்திரை : தெரிந்ததும் - தெரியாதாதும் !

சமூகத்தில் குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது நமது காவல்நிலையத்திற்கே !

காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

காவல்துறையினர் அணிந்துருக்கின்ற ஆடை ஒரே தோற்றத்துடன் இருப்பாதால் சில நேரங்களில் நம் மனதில் ஒருவித குழப்பம் ஏற்படுவதுண்டு.

சரி எவ்வாறு அவர்களை இனங்காணுவது ?

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.

இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  

Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]

Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia 

வெள்ளி, பிப்ரவரி 26, 2016

...........ஓரெழுத்து ஒருமொழி..........


=================================================== 
தமிழில் ஒரே எழுத்து மட்டும் உள்ள சொற்கள் அறுபதுக்கும் மேலுள ! அவற்றைக் காண்போமா !!! 
================================================== 
1) அ - அழகு, சிவன், திருமால், திப்பிலி 
2) ஆ - மாடு. அற்பம், மறுப்பு, துன்பம் 
3) இ – அண்மைச் சுட்டு 
4) ஈ - அம்பு, அழிவு..ஒரு சிற்றுயிர், கொடு 
5) உ – சுட்டெழுத்து, சிவன், உமை, நான்முகன் 
6) ஊ - ஊன், இறைச்சி.உணவு, திங்கள், தசை 
7) எ – வினாவெழுத்து, 7 என்பதன் குறி 
8) ஏ - ஏவுதல், அம்பு. இறுமாப்பு, மேல் நோக்கல் 
9) ஐ – நுண்மை,, அழகு.அரசன், இருமல், குரு, கோழை 
10) ஓ –ஒழிவு, மதகுப் பலகை. கொன்றை, உயர்வு,நினைவு 
11) ஔ – நிலம், விளிப்பு, கடிதல், 
12) க - நெருப்பு.,அரசன், நான்முகன், காற்று, காமன், மனம் 
13) கா – சோலை, காத்தல், காவடி, வருத்தம், வலி, துலை 
14) கு - பூமி, குற்றம், சிறுமை, தடை, நிறம், நீக்கம் 
15) கூ – கூவு, நிலம், பூமி 
16) கை – கரம், இடம், உடனே, ஒழுக்கம், சேனை, ஆள், ஆற்றல் 
17) கோ - அரசன்,அம்பு, ஆண்மகன், கண், எருது, பசு, பூமி, கோத்தல் 
18) கௌ - 'கௌவு' என்று ஏவுதல்.,கொள்ளு, தீங்கு 
19) சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல், பேய், சோர்தல் 
20) சீ – அடக்கம், அலட்சியம், ஒளி, கலைமகள், பெண், விந்து, துயில் 
21) சூ – சுளுந்து, வாண வகை, விரட்டும் ஒலிக்குறிப்பு, நாயை ஏவுதல் 
22) சே - சிவப்பு., இடபராசி, அழிஞ்சில் மரம், எருது, காளை, 
23) சோ - மதில்.அரண், உமை, வாணாசுரன் நகர் 
24) ஞா – கட்டு, பொருந்து 
25) த – குபேரன், நான்முகன் 
26) தா – கொடு, அழிவு, குற்றம், கேடு, தாண்டு, பகை, வலி, 
27) தீ – நெருப்பு, அறிவு, இனிமை, கொடுமை, சினம், நஞ்சு 
28) து – எரித்தல், கெடுத்தல், வருத்தல், வளர்தல், ”உண்” என ஏவல் 
29) தூ – தூய்மை,தசை, பகை, பற்றுக்கோடு, வெண்மை, வலிமை 
30) தே – கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், தெய்வம் 
31) தை -, தைத்தல், தை மாதம், பூச நாள், மகர இராசி, ஒப்பனை
32) ந – இன்மைப் பொருள், மிகுதிப் பொருள் உணர்த்தும் எழுத்து 
33) நா - நாக்கு, அயல், அயலார், திறப்பு, பொலிவு, சுவாலை 
34) நீ - முன்னிலை ஒருமைப் பெயர் 
35) நு – தோணி, நிந்தை, நேரம், புகழ் 
36) நூ - எள், யானை, அணிகலன், தள்ளு, தூண்டு, அசை, 
37) நே – அன்பு, அருள், நேயம் 
38) நை – நைதல், கெட்டுப்போதல், வருந்துதல், நசுங்குதல், வாடல் 
39) நொ – துன்பம், நோய், வருத்தம், தளர்வு, நொய்ம்மை 
40) நோ – வலி, சிதைவு, துக்கம், துன்பம், நோய், வலுவின்மை 
41) நௌ - மரக்கலம், கப்பல். 
42) ப – காற்று, பெருங்காற்று, சாபம், 1/20 - என்பதன் குறி 
43) பா - பாடல்,அழகு, நிழல், பரப்பு, பரவு, தூய்மை, பாம்பு 
44) பி - அழகு. 
45) பீ – மலம், தொண்டி அச்சம். 
46) பூ - மலர், அழகு, இடம்,இலை, கூர்மை, பூமி, பொலிவு, மென்மை 
47) பே – அச்சம், நுரை, மேகம், இல்லை எனும் பொருள் தரும் சொல் 
48) பை – பசுமை, அழகு, இளமை, நிறம், பாம்பின் படம், பொக்கணம், 
49) போ - 'செல்' என்று ஏவுதல். 
50) ம – இயமன், காலம், நிலா, சிவன், நஞ்சு, நேரம் 
51) மா – ஒரு மரம், அழகு, அளவு, அறிவு, ஆணி, மாவு, மிகுதி, வயல் 
52) மீ – ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம் 
53) மூ – மூன்று, மூப்பு, 
54) மே – மேன்மை, மேம்பாடு, அன்பு 
55) மை - இருள், எழுது மை, கறுப்பு, குற்றம், நீர், மலடி, மேகம் 
56) மோ – மூக்கினால் மோந்து பார்த்தல் 
57) யா - 'யாவை' , ஐயம், அகலம், கட்டுதல், பாடல் யாத்தல் 
58) வா - 'வா' என்று அழைத்தல். 
59) வி - விசை, அதிகம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை,அழகு 
60) வீ - பறவை, நீக்கு, கொல், பூ, விரும்பு, போதல், பூந்தாது 
61) வே – (கூரை) வேய்தல், வேவு பார்த்தல் 
62) வை - 'வை' என்று ஏவுதல், வைக்கோல், கூர்மை, வையகம் 
====================================================== 
நன்றி: முகநூல் - தமிழ்ப் பணி மன்றம் - 
Vaidyanathan Vedarethinam