ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 16, 2015

மனிதகுல வரலாற்றுக் குறுக்கு வெட்டுத் தோற்றம்

துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு’ என்றொரு மொழிபெயர்ப்பு நூல் வந்ததை அறிவீர்கள். ஆங்கிலத்தில் ஜாரட் டைமண்ட்’ எழுதிய Guns, Germs, and Steel எழுதிய நூலின் தமிழாக்கம். பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பதின்மூன்றாயிரம் ஆண்டுகளின் மனிதகுல வரலாற்றுக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்நூல் நேர்க்கள ஆய்வுகளின் அடிப்படையில் விவரிக்கின்றது.
வெவ்வேறு கண்டங்களின் வரலாறுகள் ஏன் வெவ்வேறாக இருக்கின்றன ? ஐரோப்பியர்களைப்போல் ஏன் இன்கா இனமக்கள் உலகைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை ? ஏன் ஐரோப்பாவுக்கு அருகில் இருந்தும் ஆப்பிரிக்கா ஓர் இருண்ட கண்டமாகவே இருந்தது ? இக்கேள்விகளுக்கு விடை கூற முயல்கிறது இந்நூல். இக்கேள்விகளுக்கு நூலில் நுவலப்பட்டுள்ள காரணங்களாய் நான் உணர்ந்தவற்றைக் கூறுகிறேன்.
1. ஐரோப்பியர்கள் நாடு பிடிப்பதற்காகக் கிளம்பிய ஆயிரத்து ஐந்நூறாம் ஆண்டுகள்வரை கடுமையான போர்களில் ஈடுபட்டனர். பிறரை அடிபணியச் செய்வோராக வரலாறு முழுக்க வாழ்ந்தவர்கள். அதே காலத்தில் உலகின் பிற கண்டத்து மக்கள் வளமான அமைதியான வாழ்வில் திளைத்திருந்தனர்.
2. விலங்குகளைப் பழக்கும் கலை ஐரோப்பியர்களிடம் முழு வளர்ச்சியடைந்திருந்தபோது இன்கா இனமக்கள் மலையாடு போன்ற ஒரு விலங்கை மட்டுமே வீட்டு விலங்காக்கி வைத்திருந்தனர் (எந்திரன் படத்தில் கிளிமாஞ்சாரோ பாட்டில் தோன்றுகின்ற ஆடு போன்ற விலங்கு). அப்போது ஐரோப்பியர்கள் பதின்மூன்று விலங்குகளைப் பழக்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டனர். இன்கா அரசனைக் காணச் சென்ற ஸ்பானிய தூதன் குதிரைமேல் அமர்ந்து சென்றானாம். ஒரு விலங்கின்மேல் மனிதன் அமர்ந்து செல்லும் காட்சியை இன்கா பழங்குடியினர் அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்திருக்கின்றனர்.
3. ஐரோப்பாக் கண்டம் கிழக்கு மேற்காகப் பரந்திருந்ததால் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை ஒரே தட்பவெப்பம்தான். அதனால் அவர்கள் எளிதில் இடம்பெயர்ந்து அறிவைச் சேகரித்து வந்தனர். போர்க்கலையில் வல்லவராயினர். பிற கண்டங்கள் வடக்கு தெற்காக இருந்தன. அக்கண்டத்து மக்கள் இடம்பெயர்ந்தால் வெவ்வேறு தட்பவெப்பங்களுக்கு இலக்காகி மடிய வேண்டியதுதான். அதனால் அவர்கள் ஓரிடத்திலேயே நிலைத்து வாழத் தலைப்பட்டனர்.
4. பயிர்த்தொழிலுக்கு விலங்குகளையும் கோடரிகளையும் பழக்கியது ஐரோப்பியர்களின் முன்னேற்றம். ஆனால், அமெரிக்க ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த சில நூற்றாண்டுகள்வரை உடல் உழைப்பால் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர்.
5. ஐரோப்பாவும் ஆசியாவும் யூரேசியா என்ற ஒரே நிலப்பரப்பாய் இருந்ததால் இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பலவும் கொடுக்கல் வாங்கலுக்கு உள்ளாகின. பிற நிலத்தவர்கள் உலகின் மற்ற பகுதிகளோடு நன்கு துண்டிக்கப்பட்டிருந்தனர்.
6. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்து ஐரோப்பியர்களால் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்பட்டது. ஆயிரமாண்டுகாலப் போர்ப் பட்டறிவில் மிகச்சிறந்த எஃகு வாள்கள் போர்களில் பயன்படுத்தப்பட்டன. பிற நிலத்தவர்கள் மரப்பொருள்களால் ஆன ஆயுதங்களோடு (ஈட்டி, அம்பு) நின்றனர்.
7. அச்சுத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சு வசதியால் ஐரோப்பியர்களிடையே பல்வகை அறிவுகளும் விரைந்து பரவின. பிற கண்டங்களில் அப்போது அறிவுப் பரவலுக்கென்று (புத்தகம் போன்ற) எந்த ஒன்றும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவேயில்லை.
8. எல்லாவிதமான விலங்குகளோடும் மல்லுக்கட்டி வாழ்ந்த வாழ்க்கை ஐரோப்பியர்களுடையது. அவர்கள் விலங்குகளைப் பழக்கியதுமுதல் போர் உள்ளிட்டவற்றுக்காக அவற்றோடே தொழுவங்களில்கூட வாழ்ந்தனர். அதனால் பற்பல நோய்க்கிருமிகளுக்கும் அவர்களுடைய உடலில் எதிர்ப்பாற்றல் தோன்றியிருந்தது. பிற நிலத்தவர்கள் தூய்மையான வாழ்வைப் பேணினர். அயல்தொற்றுகளுக்கு அவர்கள் உடலில் எதிர்ப்பாற்றல் போதவில்லை.
9. ஐரோப்பாவில் உள்ளதைப்போன்ற தட்பவெப்பம் எங்கு இல்லையோ, அங்கு ஐரோப்பியர்களால் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவின் தட்பவெப்பம் ஐரோப்பாவை ஒத்திருந்ததால் அதன்மீது ஆர்வம் கொண்டனர். கைப்பற்றினர். ஆப்பிரிக்காவின் பிற பகுதிகள் வெப்ப மண்டலங்கள். அங்கு ஐரோப்பியர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அங்கே இருந்து ஆள்வதை விடுத்து மனிதர்களை அடிமைகளாய்ப் பிடித்துச் சென்றனர். அவர்களுக்குப் பலனளிக்கும் கட்டுமானப் பெருஞ்செயல்களுக்கு உழைப்பைச் சுரண்டினர்.
10. வெப்ப மண்டலத்து மக்களை வாட்டிய புதுப்புதுத் தொற்று நோய்கள் பேரளவில் பரவி மக்களை முற்றாகச் சாகடித்தன. மலேரியா, அம்மை போன்ற நோய்கள் வரலாறெங்கும் போர்களைவிட அதிக மக்களைக் கொன்றன.
ஜாரெட் டைமண்ட்டின் நூலையொட்டி, அது கூறுகின்றவற்றை, நேசனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சியினர் மூன்றுமணி நேர ஆவணப்படமாக ஆக்கியிருக்கின்றனர். யூடியூபில் மூன்று பாகங்களாக இருக்கின்றன. நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு சற்றே அயர்ச்சி ஊட்டுவதால் ஒரே அமர்வில் அந்தப் படத்தைப் பார்த்தேன். மனித குல ஆதிக்க வரலாற்றைப் பற்றிய புதிய திறப்பு தோன்றியது என்றே சொல்வேன். புவியியல் காரணிகள் எத்துணை பருண்மையானவை என்று புரிந்தது. நூலைப் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் இப்படத்தைப் பாருங்கள். நூறு படங்கள் பார்ப்பதற்கு நேர்.

திங்கள், டிசம்பர் 22, 2014

தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை - வெங்கட் சாமிநாதன்


சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை

சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்
நான் சென்னை வந்ததும் எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன் இருபது வருடகாலமாக மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனராக பணியாற்றியவர். அவர் இங்கு வந்ததும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் இருந்த, இங்குள்ளவர்களே மறந்திருந்த, யாரென்று தெரிந்து கொள்ள விரும்பாத என்னை வழிமறித்து சினேகம் கொள்வார் என்ற எதிர்பாராத ஆச்சரியம்.

ஜெயகாந்தன் எழுத்துக்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். நிறைய ஜெய காந்தனின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நிறைய தற்கால எழுத்துக்களைப் படித்து வருகிறார் என்றும் தெரிந்தது. அதெல்லாம் சரி. ஆனால், இவ்வளவு நீண்ட காலம் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் வெளியே இருந்தவருக்கு வேறு துறையில் நிபுணத்துவம் பெற்றவருக்கு தமிழிலும் இலக்கியத்திலும் இவ்வளவு ஈடுபாடு இருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. படிப்போடு நில்லாது தான் ரசித்தவற்றைப் பற்றியும் நிறைய எழுதிவருகிறார்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அவரது இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள். இரண்டுமே இன்றைய தமிழ்க் கவிதைகளில் அவர் தேர்ந்து மொழிபெயர்த்தவை. பாரதி முதல் வைரமுத்து, சிற்பி ஆகியோர் வரை. கவிதைகளிலும் மொழிபெயர்ப்பிலும் ஆழ்ந்த ஈடுபாடும் ரசனையும் இல்லாது இது சாத்தியமில்லை. அவரது மொழிபெயர்ப்பும் இரண்டு மொழிகளிலும் அவருக்கு இருந்த சொல்லாட்சித் திறனைச் சொல்வதாக இருந்தது. அது தற்கால தமிழ்க் கவிதை பற்றியது.

இப்போது எனக்குக் கிடைத்திருப்பது (Tamil Women Poets – Sangam to the Present) சங்க காலத்திலிருந்து இன்று வரை பெண் கவிஞர்களின் பங்களிப்பை ஒரு வேக பருந்துப் பார்வை தரும் வகையில் அவராகத் தேர்ந்தெடுத்த கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார் கே. எஸ் சுப்பிரமணியம். எனக்கு மிக மன மகிழ்வைத் தந்த சமீபத்திய புத்தகங்களில் இதுவும் ஒன்று. இம்மாதிரியான ஒரு கவிதைத் தொகுப்பை தேர்வு செய்து மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியதே, சந்தையை மனதில் கொண்டு செயல்படாத மனிதர்களும் இன்றைய தமிழ்ச் சூழலில் இருக்கிறார்கள் என்பதே ஆச்சரியம் தான். தற்காலத் தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்க்க முன்னர் முனைந்த போது இத்தகைய ஒரு தொகுப்பு பற்றிய எண்ணம் மனத்தில் உதித்ததாகச் சொல்கிறார் கே.எஸ். சுப்பிரமணியம்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டு நீட்சி கொண்ட தமிழ்க் கவிதையினூடே ஒரு பிரயாணம் சங்க கால கவிதைகளிலிருந்து தொடங்கி, நீதி போதனைப் பாடல்கள்,, பக்தி காலம், தனிப்பாடல்கள் (இதில் கால வரையறை இல்லை) நாட்டுப் பாடல்கள் எல்லாம் கடந்து வந்து நவீன தமிழ்க் கவிதை வரை. பார்வை நீள்கிறது. தமிழ் வரலாற்றில் ஔவையார்கள் வெவ்வேறு கால கட்டங்களில் பலர் இருந்தனர்.ஒற்றை வரியில் நீதி போதனைகள் தந்த ஔவையாரையும்கூட விடுவதற்கு சுப்ரமண்யத்திற்கு மனம் வரவில்லை. இருப்பினும் இத் தொகுப்பு தமிழ் அறியாதோர்க்கு தமிழ்க் கவிதை வளத்தைக் காட்டும் எண்ணத்தை மனதில் வைத்துச் செய்யப்பட்டது என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

குறுந்தொகைப் பாட்டு ஒன்றில் காணப்படும் ஔவையார் ஒரு இளம் பெண்ணாகத் தான் நம் முன் காட்சி தருகிறார்.

முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ வறியாது துஞ்சும் ஊர்க்கே.

இதை சுப்பிரமண்யன் எவ்வளவு எளிதாக, அழகாக ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்!

Do I butt them? Do I toss them?\
Spurred by some impulse
Do I shout hoarse
I am at a loss
The prancing breeze
Torments me to no end
Townsfolk in slumber buried
Blissfully oblivious
Of my agony of suppressed libido
What to do I know not.

Prancing breeze என்ற சொற்றொடர் மிக அழகாக வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதே சமயம் libido என்ற சொல்லைத் தவிர்த்து desire அல்லது longing என்று சொல்லியிருக்கலாமோ, What to do I know not க்குப் பதில் what do I do I know not என்று சொல்லியிருக்கலாமே என்றும் தோன்றுகிறது. ஆனால் இதெல்லாம் கட்டிய வீட்டுக்குப் பழுது சொல்லும் காரியம்தானே. முதலில் சுப்ரமண்யம் செய்துள்ள அளவுக்கு நான் என்ன, எனக்குத் தெரிந்தவர்கள் மற்றவர்கள் யாரும் செய்திருக்கிறார்களா என்[பது சந்தேகம் தான். இதிலும் நான் மிகவும் மதிக்கும் டாக்டர் பி.ஆர். சுப்ரமண்யம் வேறு இம்மொழி பெயர்ப்புகளைப் பார்வையிட்டிருக்கிறார்.

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு,, அகநானூறு, பொருநராற்றுப் படை என தன் தேர்வுக்கு அவர் பார்வை மிகப் பரவலாகத் தான் சுப்பிரமணியம் வீசிய வலை இருந்திருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம் இப்பாடல்கள் எழுந்த வாழ்க்கைச் சூழல், அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை சார்ந்திருந்த அறமும் மதிப்புகளும், இது பற்றிய தகவல் இல்லாது இக் கவிதைகள் இந்தியாவுக்கு வெளியே உள்ள அன்னியரால் புரிந்து கொள்ளப் படுமா என்பது தெரியவில்லை எனவே இதுபற்றிய வரலாற்றறிவோடு இக்கவிதைகளை அணுகுபவர்களுக்கு கூடிய ரசனை தரும் என்று நினைக்கிறேன். இது எவ்விதத்திலும் சுப்ரமண்யத்தின் மொழிபெயர்ப்புகள் தரும் அனுபவத்தை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

அகநானூறிலிருந்து ஒரு சில வரிகள் மாத்திரம். எவ்வளவு கஷ்டமான பகுதியையும் எவ்வளவு தெளிவாக இன்றைய வாசகனுக்கு எளிதில் .கிடைக்கச் செய்துவிடுகிறார்! சங்க காலத் தமிழ்ப் பாட்டை இன்றைய ஆங்கிலத்தில் கொண்டு வருவதில் எவ்வளவு சிரமங்கள் இருந்திருக்கும் என்பதை எளிதில் கிடைத்த ஒன்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியாது.

அகநானூறு 154 –

குறும்புதற் பிடவின் நெருங்கால் அலர்
செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப
வெஞ்சின அரவின் பை அணந்தன்ன
தண்கமழ் கோடல் தாது பிணி அவிழத்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு

Long stemmed flowers of pidavan bushes
Carpet the red soil
Lending it allure
Like the raised hoods of angry snakes
Cool kanthal buds unfold
Spreading aroma around;

பக்திப் பாடல்களிலிருந்து இங்கு இடம் பெற்றிருக்கும் காரைக்கால் அம்மையாரும் ஆண்டாளும் இருவரே ஆனாலும் இருவரும் இரு சிகரங்கள்.

கீசுகீ சென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

இது எவ்வளவு அழகாக சரளமான அதே இனிய நடையில் ஆங்கிலத்தில்..

Black sparrows in droves
Fill the air with ‘keech keech’ chirps
Don’t you hear it, stupid girl?

தனிப்பாடல்கள் என்ற வகையில் நாம் சாதாரணமாகக் கேள்விப் படாத பெயர்களும் பாட்டுக்களும் காணப்படுகின்றன. இவற்றின் கால கட்டத்தை அறிவது கஷ்டம் தான். அவசியமும் இல்லை. ஆனால் இவையெல்லாம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தியவையாக இருக்கும். முனையதரையன் என்ற அரசனுக்கு திருக்கண்ணபுரம் தாசி சொல்கிறாள்:

இன்றுவரி லென்னுயிரை நீ பெறுவை இற்றைக்கு
நின்று வரிலதுவும் நீயறிவை – வென்றி
முனையா கலவி முயங்கியவா றெல்லாம்
நினையாயோ நெஞ்சத்து நீ.

Come this day
You’ll find me alive
Delay by a day or two
Sure you’ll see the result
O Victorious Munayaa
Won’t your heart recall
Many a passionate union?

நாட்டுப்பாடல் வகையில் தாலாட்டுப் பாடல்கள் அவ்வளவாக ஆங்கிலத்தில் சுகமான வாசிப்புத் தருவதில்லை. அவர்கள் தொட்டிலிலோ ஊஞ்சலிலோ குழந்தையை இட்டுத் தூங்கச் செய்யும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை போலும். தாலாட்டுப் பாடல்களின் தமிழ் ஓசை நயத்தைக் கொணராவிட்டால் பின் அவை எப்படி தாலாட்டு ஆகும்.? ஆக இதில் சுப்பிரமணியத்தை நாம் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால் சக்களத்திச் சண்டைகள் எங்கும் இருக்கும் தானே. அது இன்றைய் பொருளாதாரத்துக்கு முன்னேயே உலகமயமானது தான் (Globalised} இதோ மாதிரிக்கு சில வரிகள். பின் ஆங்கிலத்திலும் வாசிக்க சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன..

மாதிரிக்கு சில வரிகள்

”………………………………………………………………
செட்டிக்கடை வெட்டி வேரு
சிவகாசிப் பன்னீரு
மதுரைக் கடைச்சக்களத்தி
மறக்கப் பொடிபோட்டா
குதிரைவாலிக் கருது போல
குறிச்ச பொண்ணு நானிருக்கேன்
சரவட்டைக் கருதுக்காக
சாம வழி போகலாமா?…….”

எந்தத் துறையானால் என்ன, எந்த மக்களானால் என்ன, எந்த மொழியானாலென்ன, வெகு சுலபமான ஆங்கிலத்தில் சொல்லிவிட முடிகிறது சுப்பிரமண்யத்தால்.

Cuscus grass from Chetty shop
Fragrant Sivakasi pannier
He forgets in the vile spell
Cast by the Madurai slut

Here I am so georgeous
Like lush paddy sheaf
And I’am the girl anointed too;
In search of measely stalk
Should you scurry so far.

iஇதிலெல்லாம் நமக்கு அனேகமாக ஏதும் பிரசினை இருக்காது. நீதிப் பாடல்கள் தான் கவிதையாகுமா, அதில் ஏது பாவமும் மற்றதும் என்று நாம் நினைப்போம். சங்கப்பாடல்களும், பக்திப் பாசுரங்களும் ஏற்கனவே தொகுக்கப்பட்டவை. அவற்றில் எதைச் சோடை என்பது? யார் எந்தத் தேர்வு செய்தாலும், யாரும் ஏதும் சர்சைக்கு வரமாட்டார்கள். பழசெல்லாம் புனிதம் என்ற மரபு சார்ந்த பார்வை வேறு.

ஆனால் சமீப கால எழுத்துக்களில் அதிலும் பெண் கவிஞர்கள் என்றால் நமக்குள் நிறைய கருத்து வேறு பாடுகள் இருக்கும். ஆனால் சுப்பிரமணியம் இந்த வம்புக்கெல்லாம் போவதில்லை. பெண் கவிஞர்களே முப்பத்து மூன்று பேர்களை நம் முன் வைத்திருக்கிறார். இவ்வளவு பெண் கவிஞர்கள் இருக்கிறார்களா என்று நமக்குத் திகைப்பு. இருக்கிறார்கள் தான். நம்மில் அதிகம் கண்களில் படும் பெயர்களை மட்டுமல்ல, அவர்களையும் தாண்டி நாம் அநியாயமாக மறந்து விட்டவர்களையும், சுப்பிரமணியம் தேடிப்பிடித்து வந்துள்ளார். சமீபத்தில் தெரிய வந்த, வயதில் மூத்த பூரணி, பின் நாம் மறந்துவிட்ட திரிசடை, இரா.மீனாட்சி வயதில் எல்லோரிலும் இளைய என்று நான் யூகிக்கும் வெண்ணிலா/அழகுநிலாவோடு அனேகமாக பெண் கவிஞர் குழாமே தம்முள் ஒருவராகக் கருதாத ஆனால் பேசப்படவேண்டிய திலக பாமா வரை நிறைய பெண் கவிஞர்களை இத்தொகுப்பில் சுப்பிரமணியம் சேர்த்துள்ளார்

இக்குரல்கள், பல வகைப்பட்டவை. அவர்கள் கவிதையாக்கியுள்ள அனுபவங்களும் பார்வைகளும், அவர்கள் கையாளும் மொழியும் அவரவர்க்கு உரியன. இவர்கள் எல்லாம் தான் எங்களது இன்றைய ஆதிமந்தியாரும் அஞ்சில் அஞ்சியாரும் என்று சொல்வது போல. நமக்கு மட்டுமல்ல. தமிழுக்கு அன்னியமான ஆங்கிலம் வழி இப் பெண்கவிஞர்களையும் அவர்கள் பேச வந்துள்ளதையும் பரிச்சயப்படுத்திக்கொள்ள வருபவர்களுக்கும் இவ்வுலகத்தைக் காண சில ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்தது போல இருக்கும். அவை நிச்சயமாக வேறு பட்டவையாகவும் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

இது நமக்கு ஒரு பருந்துப் பார்வை தரும் அதே சமயம் சுப்பிரமண்யத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும். இரண்டுமே நல்ல அனுபவங்கள் என்னைப் பொறுத்த வரை. என் இஷ்டத்துக்கு என் தேர்வுகளில் சில. எல்லாவற்றையும் கொடுக்க இயலாது.. அப்படித்தானே நம் எல்லோருக்கும் இருக்கும்.

சல்மாவின் கவிதை ஒன்று. அதன் முதல் பத்தியும் கடைசிப் பத்தியும்.

தன் வழி தவறி
அறைக்குள் சிக்கிய
பட்டாம்பூச்சி துவக்கிற்று
தன் தேடலை

……………………

என்றேனும்
கதவு திறந்து வழி கிடைக்குமெனில்
அது பறந்து தான் போகும்
வர்ணங்கள் இல்லையென்றாலும் கூட

Losing its way
Trapped in the room
Starts its search
This butterfly

One day some day
Should door open and way found
Sure it would wing its way out
Though robbed of its hues.

இதே போல திலக பாமா கவிதை ஒன்றின் ஆரம்பமும் இடையில் ஒன்றும்..

நினைவுப் பரணிலிருந்து எழுப்ப முடியவில்லை
தூசிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும்
வார்த்தைகளை
………………

மூடிய இமைகளுக்குள்
உலவும் இருளுக்கு
வெள்ளைக் காகிதங்களின் குணம்
கவிகதைகளாய் என்
நினைவுகளைச் சுமந்து
மடி நிரப்பியிருக்கிறது……

Words
Buried in a pool of dust
I can’t retrieve from the memory’s loft

The inky darkness
Encased in shut eyelids
Assumes
White paper’s aspect
Films my madi
As poems
Carrying my memories

இன்னும் ஒரே ஒன்று. உமா மகேஸ்வரியின் தனிமையையும் வெறுமையையும் காட்சிப் படுத்தும் ஒரு கவிதை. ஆரம்பப் பத்தி மாத்திரம்

வெளிவாசல் வழியே
சலித்த மதியம்
சாக்கடை நீரருந்தும் குருவி
உதிர்கிற மென்மையும்
உடைபடாக் கடினமும்
விசித்திரமாய் முடைந்த மௌனம்

The noon
Filtered through the front door
A sparrow drinking gutter water
A silence
A strange weave of
Softly enveloping tenderness
And unrelenting hardness.

போதிய பரிச்சயம் தந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். தமிழ்த் துறைக்கே, தமிழ்க் கவிதைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களிடமிருந்து இத்தகைய ஒரு முயற்சி வரும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அவர்கள் வண்டிச் சுவடை ஒட்டியே தம் பயணத்தை மேற்கொண்டு தடம் முடியும் இடத்தில் முடித்துக் கொள்பவர்கள். தமிழைப்புதிய தடத்தில் இட்டுச்சென்ற வர்கள் அனேகமாக தமிழ் துறை சாராதவர்களாக இருந்திருக்கிறார்கள். வக்கீலுக்குப் படித்த வையாபுரிப் பிள்ளையும் ரசிக மணியும் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்.. ஒரு சமயம் ஐம்பதுகளின் இறுதியில் ஒரு கூட்டத்தில் ரா.பி.சேதுப் பிள்ளையும் இருந்தார். விஞ்ஞானி கே.எஸ் கிருஷ்ணனும் இருந்தார். ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி. அதிகாரியும் இருந்தார். பெயர் மறந்து விட்டது. ரா.பி. சேதுப் பிள்ளையிடமிருந்து புதிதாகப் பெற எனக்கு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் கே.எஸ் கிருஷ்ணன் தான் ஆத்மார்த்தமாக தான் படித்துப் புரிந்து கொண்ட திருக்குறளைப் பற்றிப் பேசியது ஒரு புதிய பார்வையாகவும் அனுபவமுமாக இருந்தது.

கம்பன் ராமகாதையைத் தொடங்குமுன் “ஆசை பற்றி அறையலுற்றேன்” என்று சொல்லித் தான் தொடங்குகிறான். ஆசை பற்றி செயல்படும் எதுவும் சிறப்புடன் இருக்கும். மற்றதெல்லாம் தான் நமக்குத் தெரியுமே.

அது போல் தான் ஆசிய வளர்ச்சி வங்கியில் மணிலாவில் இருபதாண்டு காலம் கழித்த கே.எஸ் சுப்பிரமணியம் தந்துள்ள இந்த் தமிழ்க் கவிதைத் தொகுப்பும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும்,.

Tamil Women Poets: Sangam to the Present: Translation: K.S.Subramaniam
Tamil University, Thanjavur pages 276 + 16 Rs100

நன்றி - திண்ணை 


வியாழன், நவம்பர் 06, 2014

மனமென ஒன்று உண்டா? :ஆரோக்கியமான விவாதம்


நன்றி : சு.பொ.அகத்தியலிங்கம்

“ உனக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதாஇல்லையா?” 
“ மனமென ஒன்று உண்டா?”
பார்வைக்கு இரண்டு கேள்விகளும் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றல்ல

முதல் கேள்வி வழக்கமாய் நம்மிடையே நடக்கும் உரை யாடலில் இடம்பெறுவதுஎதிரேஇருப்பவரின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் தன்மையுடையதுஇரண்டாவது கேள்விஅறிவியல் சார்ந்த வினாஇதற்கான விடை தேடல் தத்துவ உலகிற்கு நம்மைஇட்டுச்செல்லும்.

மனச்சாட்சியின் படி நடந்து கொள்வேன் எனஉறுதிமொழி ஏற்பதும்மனச்சாட்சிஉறுத்தவில்லையாஎன குற்றம்சாட்டுவதும் இயல்பாக நடக்கிற ஒன்று.திடீரென “மனம் எனஒன்று இல்லை” என்று யாராவதுசொன்னால் ஏற்பது அவ்வளவு சுலபமல்ல . ஆயின்கருத்துமுதல் வாதத்துக்கு எதிரான போரில் நமது புரிதல் மேம்படவும்கூர்மையடையவும்இதுபோன்ற அலசல்கள் அவசியம்தேவைப்படுகிறது . பாவீரமணி எழுதியுள்ள “ மனமெனஒன்று உண்டா?” என்கிற நூல் “மனம்” குறித்த ஒரு பரந்த விவாதத்திற்குத் தளம்அமைத்துள்ளது . 
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்வெளியிட்டு வரும் மாத இதழான “செந்தமிழ்ச்செல்வியில் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்துள்ளதுபுலவர் நடேசநாராயணன் “மனம்என்று ஒன்றில்லை” என இரு ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார்அதற்கு தமிழாகரர்தெ.முருகசாமிஎன்பவர் “மனம் என ஒன்று உண்டு” என மறுப்பு எழுதினார்பாவீரமணிஅவரை மறுத்து “மனம் என ஒன்று இல்லை” என பதிலடி கொடுத்தார்.மீண்டும்தெ.முருகசாமி தன் முந்தைய நிலைப்பாட்டை வலியுறுத்தி யும் வீரமணியைமறுத்தும் பதில் எழுதினார்மீண்டும் வீர மணி அதனை மறுத்து “ மனமென ஒன்று இல்லை “என உறுதி செய்தார்இவை அனைத்தின் தொகுப்பாக இந்நூல்வந்துள்ளதுஆக ஒருபக்ககருத்தாக அன்றி இருதரப்பு வாதமாக ஒட்டியும் வெட்டியும் விவாதத் தொகுப்பாகஇந்நூல்வந்துள்ளதுஅதே சமயம் விவாதம் முடிந்ததாகக் கருதக்கூடாதுஇந்நூலைஅடியொற்றி இவ்விவாதம் முன்னெடுக்கப்பட்டால் பயனுள்ள தத்துவ போதனையாகஅமையும் என்பதில் ஐயமில்லை.

 “ உண்மையில் மனம் என்று ஒன்று இல்லை . புலன்களால் பெறும் அறிவுகள்புலன் நரம்புச்செல்களில் மூளை நரம்பு செல்களில்நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன . இந்தநினைவுகளையே நாம் `மனம்’ எனக் கற்பனை செய்து கொள்கிறோம்மனம் என்பதுஅருவம்நிழல்மனம் என்று எந்த உறுப்பையும் சுட்டிக்காட்ட முடியாதுஆனால்அறிவுக்குஅடையாளம் காட்ட முடியும்ஆம்நமது ஐந்து பொறிகள்தாம் அறிவின் உறுப்புகள்அறிவின்வாயில்கள்” என்று நடேச நாராயணன் விவாதத்தைத் துவங்குகிறார்இது உண்மையைநெருங்க செய்யும் வாதம்ஆயினும் முழு உண்மையாகுமா ?


தெ.முருகசாமி மனம் வேறு மூளை வேறு என வாதிடுகிறார். “மனமோ காட்டலாகப்பொருளாகிய அக உறுப்பு” என்கிறார் . மேலும் மனமே மூளையை ஆட்டுவிப்பதாகக்கூறுமளவுக்குச் சென்றுவிடுகிறார்தொல்காப்பியம்குறள் இவற்றிலிருந்துஎடுத்துக்காட்டுகளோடு வாதிடுகிறார் இவர். “.. தொல்காப்பியர் ‘ மக்கள் தாமே ஆற்றிவுயிரே ’என்பதாகமட்டும் கூறவில்லைஅந்த ஆறாவது அறிவு மனத்தால் அமைவது என்பதாகவேபதிவு செய்துள்ளார்ஆற்றிவதுவேஅவற்றொடு மன்னே’ செய்யுளியல் 27 என்பதால் மனஅறிவு என்றொன்றில்லாமல் இப்படிக் கூறமுடியாதுஇதனால் மனம் என்ற ஒன்றைத்தொல்காப்பியர் கூறினார் எனத் தெளியலாம்” என்கிறார் முருகசாமி.

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்அது மொழியின்இலக்கண முறைமையைப் பற்றிப்பேசுவதுஎழுத்தைப் பற்றியோசொல்லைப் பற்றியோ ஒரு முடிவுக்குவருவதற்குஅந்நூலைத் துணை கொள்ளலாம்ஆனால் மனம் என்பதுஉடற்கூற்றியல்அறிவியலைச் (ANATOMY) சார்ந்தது.அதுவும் இப்போது எலும்புகள்வயிறுநுரையீரல்,இதயம்போன்ற உறுப்புகளுக்குத் தனித்தனித் துறை வளர்ந்திருப்பதைப் போன்று மனதைப்பற்றிய உளவியல் [PSYCHOLOGY] துறையும் மூளையோடு தொடர்புடைய நரம்பியல்துறையும்நன்கு வளர்ந்துள்ளனஇக்காலத்தில் மனம் பற்றிய ஒருசரியான முடிவுக்குவரவேண்டுமானால் உளவி யலும் மூளைத் தொடர்புடைய நரம்பியல் துறையும்தாம் நமக்குசரியான வழிகாட்ட முடியும் தொல்காப்பியமோ வேறு இலக்கண நூல்களோ அல்லநாம்எந்தப் பொருளைப் பற்றி ஆராய்ந்தாலும் அதற்குத் திரும்பத் திரும்பத்தொல்காப்பியத்தையும்திருக்குறளையும்மற்ற சமய நூல்களையும் எடுத்துக்காட்டிஅவைகூறும் முடிவுகளே சரியானவை எனச் சாதிக்கிறோம் . இது இக்கால அறிவியல்உலகத்துக்குப் பொருந்தாது” என்கிறார் வீரமணி.

ஆறாவது அறிவு என்பது என்னஇதற்கு “பழக்க அறிவாகும்” என நடேச நாராயணர் கூறும்விளக்கம் போதுமானதல்லஆறாவது அறிவு எது என்பது குறித்த தெளிவுமனம் குறித்தபுரிதலுக்கு அடிப்படையாகத் தெரிய வேண்டும்.இதனை பகுத்தறிவென்பர்அதாவது நன்மைதீமைகளைப்பகுத்துப் பார்க்கும் அறிவென்றே பலரும் சொல்லிவைத்துள்ளனர் .ஆயினும்இதுவும் முழு உண்மையை நெருங்கவில்லை. “கருவிகளை படைக்கும் திறனே” ஆறாவதுஅறி வென மார்க்சும் எங்கெல்சும் வரையரைசெய்ததே சரியான பார்வையாகும்இதனைவீரமணி உள்வாங்கியுள்ளது அவரது வாதத்துக்கு வலு சேர்க்கிறது.

உளவியல் துறையை ஏன் மூளைதுறை என்று கூற வில்லை என்பன போன்ற சிலவாதங்களோடும்அறிவியல் ரீதியாக மூளையின் பாத்திரம் யாதுபுற உலகின் பிரதிபலிப்புத்தான் சிந்தனை என மார்க்ஸ் எவ்வாறு முடிவுக்கு வந்தார் ? சில வேதியல்மருந்துகளின் உதவி கொண்டு மன வியாதிகளைத் தீர்க்க முடிவது எப்படி ? மூளையின்சிறுபகுதியை அறுவை சிகிச்சை செய்துகூட உளவியல் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்படுகிறதேஎப்படிமூளைதான் அடிப்படை என்பதை இதன் மூலமெல்லாம் அறியமுடியும் எனவாதிடுகிறார் . 
மூளைச்சாவு என்பதையே இப்போது மரணம்என ஏற்றுக்கொள்வதையும் தன் வாதத்திற்குவலுசேர்க்க வீரமணி பயன் படுத்துகிறார். “எண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்றபழமொழி மெய்யாகிறது வீரமணி வாதத்தில்மூளைகுறித்த பல்வேறு அறிவியல்செய்திகளை விவரிக்கிறார்பெருமூளை , சிறுமூளை குறித்த அறிவியல் செய்திகளைதருகிறார்இதனை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்அதனைவாழ்க்கையோடுஉரசிப்பார்த்திருக்கிறோமாஎன்பதுதான் கேள்விஅதைத்தான் வீரமணி செய்துள்ளார்

மகிழ்ச்சிகோபம்என பல்வேறு உணர்ச்சிகளை மூளையே உணர்கிறதென்றும் ;அப்போதுஇரத்த ஓட்டமும் இதயத்துடிப்பும் மாறுபடும் ; இதயத்தில் கைவைப்போம் ;இதனால் மனம் இதயத்தோடு சம்பந்தப்பட்டதாகக் கருதிவிட்டோம் என்பதையெல்லாம்வீரமணி பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார் .
அன்பு ,பாசம்இரக்கம் போன்ற நல்லுணர்வுகளும் மூளையின் அறிவுச்சேகரங்களே எனநிறுவுகிறார் . பேய்பிசாசு போன்றவைகற்பனையே எனச் சாடுகிறார் . அறிவியல்பார்வையோடுதான் இவற்றை அணுகவேண்டும் என்கிறார் .

 “ சிற்பியின் மூளையிலோ , பொறியாளரின் மூளையிலோ சிறு சேதமோஊறோஏற்பட்டுவிட்டால் சிற்பியாலோ , பொறியாளராலோ எதனையும் வெளிப்படுத்த இயலாது.அந்நிலையில் மனம் எங்கே போயிற்று ? மனத்தின் பங்குதான் என்ன ? அங்கு சிற்பமும்தோன்றாது ; வீட்டு வரைபடமும் தோன்றாதுஒன்றும் ஏற்படாது என்பதுதான் உண்மை .மூளைதான் எல்லாம் மனம் என ஒன்றில்லை என்பதுதான் அறிவியல் அளிக்கும் விடை.”என முத்தாய்ப்பாகக் கூறிமுடிக்கிறார் வீரமணி .
மனம் என்ற ஒன்று இல்லை என்கிறபோது அதனோடுதொடர்புடைய ஆன்மாகடவுள்போன்ற கருத்தோட்டங்களும் ஆட்டம் காண்கின்றன . மாயாவாதத்துக்குஎதிராகவும் கருத்துமுதல் வாதத்துக்கு எதிராகவும் மார்க்சியத்தை அதாவது இயங்கியல் பொருள் முதல்வாதத்தை முன்வைக் கிறது . இது மிகவும் அடிப்படையானது . ஆகவே இந்நூலை மிகநுட்பமாகப் படித்து விவாதம் செய்தால் தத்துவப் புரிதல் வலுவடையும் . 

நூல் வடிவமைப்பில் சில குறைபாடுகள் உள்ளனஆசிரி யர் கருத்து எது ? எதை மறுக்கிறார் ?எதை மேற்கோள்காட் டுகிறார் என்பதை பிரித்து சாதாரண வாசகன் புரிந்து கொள்வது சிரமம்.மேற்கோள்களை சாய் வெழுத்தாகவோ அல்லது சற்று உள்ளடக்கியோசிலவற்றைதடிப்பெழுத்தாகவோ அச்சிட்டிருந்தால் குழப்பம் தவிர்த்திருக்கலாம்
இந்நூல் படித்து முடியும் முன் பல கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாது . 

·         மனம்ஆன்மா என்பதெல்லாம் மூளையின் உணர்ச்சிப் பிரதேசத்தின் பதிவு என்றஅறிவியல் புரிதல் மிகச் சரிதான்ஆனால் அந்த உணர்ச்சிகள் ஒரு இயற்பியல்சக்தியாக தனிமனிதனிடமும் சமூகத்திலும் வினையாற்ற வில்லையா?இந்நிலையின் மனத்தின் சமூகப் பாத்திரம் குறித்தும்தனிமனிதனுக்குள் மனதின்பாத்திரம் குறித்தும் வெறும் எந்திரவியல் பார்வை போதுமாசரியானதாபயன்தருமா ?

·         மனச்சாட்சி , மக்களின் மனஓட்டம்சமூக உளவியல்மனதை வென்றெடுப்பதுமனதை ஒருமுகப்படுத்துவதுமன உறுதி இவையொற்ற சொற்பிரயோகங்களுக்குப்பின்னால்உள்ள ஆற்றலை வெறுமே மூளையின் செயல்பாடென மட்டும் சுருக்கிக்கூறிவிட இயலுமா?


·          “ ஒரு கருத்து மக்களின் கவ்விப் பிடிக்கும் போது அது ஒரு இயற்பியல் சக்தியாகிவிடுகிறது” எனக் காரல் மார்க்ஸ் அறுதியிட்டுக் கூறியது மனத்துக்கும் பொருந்தும்அல்லவா ? மார்க்சிஸ்டுகளும் மனம்மன உறுதிமனச்சாட்சி போன்ற மனம்தொடர்பான வார்த்தைகளைத் தொடர்ந்து பெருமளவு பயன்படுத்திவருதல் கண்கூடு.இதன் பொருள் கருத்துமுதல் வாதிகள் நோக்கில் மனம் என்று இவர்கள்கூறாவிடினும் மனம் எனும் இயற்பியல் சக்தியை இவர்கள் குறைத்துமதிப்பிடவில்லை அல்லவா?

இது போன்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பி விளக்கம்தேடும் போது ஒருங்கிணைந்தசரியான பார்வையும் புரிதலும் வலுப்பெறும் இந்நூல் பரந்த கூர்மையான ஆழமானவிவாதத்துக்கு வழிகோலியுள்ளதுஇயங்கியல் பொருள்முதல் வாதத்தை மிகச் சரியாகஉள்வாங்க இந்த விவாதம் உதவும் என்பதில் ஐயமில்லைஅதுவும் மார்க்சியத்தை தமிழ்ச்சூழல் சார்ந்து விவாதிக்க இந்நூல் பெரிதும் உதவும்இந்நூலைப் படிப்பதும் கூட்டாகவிவாதிப்பதும் காலத்தின் தேவை 

நன்றி : தீக்கதிர் , புத்தகமேசை , 19-10-2014